வலிப்பு நோய் வந்தால் இரும்புச் சாவியை கொடுத்தால் சரியாகுமா?.. டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு சாவி கொடுத்தால் வலிப்பு நோய் நிற்குமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு வலிப்பு எந்த சமிக்ஞைகளும் காட்டாமல் திடீரென்று ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டு அதனால் சுய நினைவை மூளை இழந்து மூர்ச்சையாகும்.

வலிப்பு நோய்க்கு முறையான நவீன மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து எடுக்க வேண்டும். மருந்துகளை மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்துவது தவறு . உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது.

வலிப்பு நோய்

வலிப்பு நோய்

குறைந்தபட்சம் கடந்த ஒரு வருடமாவது வலிப்பு ஏற்படாத அளவு மருந்துகளுடன் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்குவது நல்லது. அடிக்கடி வலிப்பு ஏற்படுபவர்கள் தனியாக பயணம் செய்வது வாகனம் இயக்குவது, நீச்சலடிப்பது ஆபத்தான செயலாகும். வலிப்பு என்றால் கை கால்களை வெட்டிக் கொண்டு தான் வர வேண்டும் என்றில்லை.

கை கால்கள்

கை கால்கள்

கை கால்களை வெட்டாமலும் கண்கள் ஓரிடத்தில் நிலை குத்தி நின்று அல்லது எந்த உணர்வும் இல்லாமல் சில நேரம் மூர்ச்சையாக இருக்கும் சூழ்நிலை போன்றும் வலிப்பு ஏற்படலாம். வலிப்புக்கு இரும்புச் சாவியை வழங்குவது சிகிச்சை ஆகாது. அது ஒரு மூடநம்பிக்கை. வலிப்பு ஏற்பட்டவரை ஒருபக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும்.

பற்கள் இறுக்கம்

பற்கள் இறுக்கம்

அவர் பற்கள் இறுக்கமாக நாக்கை கடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் முடிந்த அளவு பற்களை கடித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம். வலிப்பு ஏற்பட்டவருக்கு நீரோ உணவோ கொடுக்கக் கூடாது. வலிப்பு ஏற்பட்டவருக்கு அவ்வாறு கொடுத்தால் நுரையீரலுக்குள் சென்று புரையேறிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது ஆபத்தானது.

நல்ல காற்றோட்டம்

நல்ல காற்றோட்டம்

வலிப்பு ஏற்படுபவரை நல்ல காற்றோட்டமுள்ள சூழலில் கிடத்தி வைக்கவேண்டும். அவரைச் சுற்றிக் கூட்டம் போட்டு காற்று செல்வதைத் தடுக்கக் கூடாது. வலிப்பு ஏற்படும் போது அதை கை கொண்டு அமுக்குவது வலிப்பு ஏற்படும் நபர்களை அழுத்துவது போன்றவற்றை செய்யக்கூடாது. 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் .

வலிப்புக்கு சிகிச்சை

வலிப்புக்கு சிகிச்சை

வலிப்புக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். அடுத்த முறை வலிப்பு ஏற்படாமல் இருக்க முறையான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். வலிப்பு நோயின் நிலையில்லாமை (UNCERTAINTY) மற்றும் எதிர்பாராதன்மையை ( UNEXPECTED OCCURENCE)குறித்து விழிப்புணர்வு வேண்டும். வலிப்பு நோய் இருப்பவரால் அதற்குரிய மாத்திரைகளை உட்கொண்டு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்.

வலிப்பு நோய்க்கு முறையான சிகிச்சை

வலிப்பு நோய்க்கு முறையான சிகிச்சை


வலிப்பு நோய்க்கு முறையான சிகிச்சையில் இருப்பவரால் திருமணம் செய்து கொண்டு தாம்பத்தியத்தில் இயல்பாக ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். விளையாட்டுகளில் கேளிக்கைகளில் மற்றவர் போல ஈடுபட முடியும். அலுவலகங்களில் மற்றவரைப் போல சிறப்பாக பணியாற்றிட முடியும். எனினும் வலிப்பு நோய் இருப்பவர்கள் கட்டாயம் மது புகை மற்றும் இதர போதை வஸ்துக்களை விட்டொழிக்க வேண்டும்.

வலிப்பை தூண்டக் கூடியவை

வலிப்பை தூண்டக் கூடியவை

காரணம் இவை வலிப்பை தூண்டக் கூடியவை. மது போதையில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டால் ஆபத்தாகும் சூழ்நிலை உருவாகும். உயரமான இடங்களில் பணியாற்றுவதையும் வாகனங்களை இயக்குவதையும் வலிப்பு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். அதீத வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை இல்லாமல் தினசரி நல்ல உறக்கம் இருப்பின் வலிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

உணவைப் பொருத்தவரை அதிக மாவுச்சத்து உணவு முறையை விடுத்து குறை மாவு உணவு முறை வலிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனளிக்கிறது. வலிப்பு குறித்த விழிப்புணர்வைப் பெற்று முறையாக மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவரிடம் முறையான கண்காணிப்பில் இருந்து வருவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தி சிறப்பான வாழ்வை வாழ்ந்திட முடியும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+