தக்காளி காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது! அரசு டாக்டரின் முக்கிய டிப்ஸ்!
சென்னை: தக்காளிக் காய்ச்சல் (Tomato Flu) என்ற Hand Foot Mouth Disease ( HFMD ) அச்சம் தேவையா? என்பது குறித்து சிவகங்கையை சேர்ந்த அரசு பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் பேஸ்புக் பதிவில் கூறுகையில், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு "தக்காளிக் காய்ச்சல்" என்ற பெயரில் விநோதக் காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் பரவின.
இதுவரை 80 குழந்தைகளுக்கு இந்த நோயின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாய் , கை மற்றும் கால் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றும். இந்தக் கொப்புளங்கள் பார்ப்பதற்கு "தக்காளி" போல தோற்றமளிப்பதால் இந்த காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வந்தது.

தக்காளிக்கு தொடர்பில்லை
மற்றபடி நாம் உண்ணும் தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தக்காளி காய்ச்சல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு மருத்துவ உலகத்தில் HFMD HAND FOOT MOUTH DISEASE என்று பெயர். இந்த நோய் எண்டெரோ வைரஸ் குடும்பத்தின் வைரஸ்களினால் ஏற்படுகிறது.

வைரஸ்
தற்போது நாம் சந்திக்கும் இந்த தக்காளி காய்ச்சலை காக்சாக்கி ஏ 16 (COXSACKIE A 16 VIRUS)எனும் வைரஸ் தோற்றுவிக்கிறது. இவ்வகை வைரஸ் தொற்று குழந்தைகளிடையே மிகவும் மிதமான வீரியத்துடன் வெளிப்படும். இந்த வைரஸ் தாக்கிய குழந்தைகளுக்கு வாய் கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றலாம்.

உடல் சோர்வு
காய்ச்சல், உடல் சோர்வு, நீரிழப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோய்க்கு நேரடியாக வைரஸ் கொல்லி மருந்துகள் இதுவரை இல்லை. ஆயினும் இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண் மற்றும் நீர் இழப்பிற்கு அதற்கு உகந்த சிகிச்சை நம்மால் வழங்கிட இயலும். அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் இந்தத் தொற்றின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் மீண்டு விடுவர்.

உயிரிழப்பு
இவ்வகை வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு அபாயம் இல்லை. எனவே பெற்றோர்கள் இதுகுறித்து வீண் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாயில் புண் இருப்பதால் உணவு சரிவர உண்ணமாட்டார்கள். எனவே இயன்றவரை திரவமாக உணவை வழங்கிட வேண்டும்.

கஞ்சி, பழச்சாறுகள்
கஞ்சி, பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை வழங்கலாம். வாய்வழி உட்கொள்ள இயலாத நிலை இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த நாளம் வழியாக திரவங்களை வழங்கலாம். இந்த நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடைய முடியும்.

உயிருககு ஆபத்து
உணவு மற்றும் திரவங்கள் உட்கொள்ளாத நிலையில் குழந்தையை சில நாட்கள் வீட்டிலேயே எந்த மருத்துவ உதவியும் கிடைக்காமல் வைத்திருப்பது குழந்தையின் உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடும். இத்தகைய குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். இந்த நோய் இருமுவது தும்முவது மற்றும் அந்த கொப்புளங்களில் இருந்து வரும் திரவம் வழியாக நேரடியாக மற்றொருவருக்கு பரவும்.

குழந்தைகள்
எனவே இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளை தொற்றின் அறிகுறிகள் குணமாகும் வரை தனிமையில் வைத்திருப்பது அவசியம். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் , தன் சுத்தம் பேணுதல், நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தும் குழந்தைகளின் டயாபர்களை முறைப்படி அப்புறப்படுத்துதல் இந்நோய் தாக்குதலுக்குள்ளான குழந்தைகளிடம் மற்ற குழந்தைகள் நேரடியாக தொடர்பில் இல்லாதிருத்தல் போன்ற எளிய விஷயங்களைப் பேணுவதன் மூலம் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இறுதியாக தக்காளிக் காய்ச்சல் என்ற பெயரில் பரவும் இந்த HAND FOOT MOUTH DISEASE குறித்து பெரிய அச்சம் பொதுமக்களிடையே தேவையில்லை. எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவிததுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications