ஒரே கல்லில் இரு மாங்காய்.. தொப்பை, முதுகுத் தண்டுவட வலியை குறைக்க சூப்பர் வழிகள்.. டாக்டர் கவுதமன்
சென்னை: தொப்பையால் ஏற்படுகிற முதுகு தண்டு வலியால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வை கூறியுள்ளார் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவர் கே கவுதமன்.
இதுகுறித்து டாக்டர் கவுதமன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் தொப்பைக்கும் முதுகுதண்டில் வரக் கூடிய வலிக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என நிறைய பேர் கேட்கிறார்கள். உடல் எடை என்பது முதுகுதண்டு பிரச்சினைக்கு மிகப் பெரிய காரணமாகும்.
இதில் சந்தேகம் இல்லை. யாரெல்லாம் உடல் எடை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் முதுகுதண்டுவட பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

தொப்பை
அது போல் உடல் எடையை விட தொப்பை என சொல்லக் கூடிய விஷயம், உடல் எடையில் 10 சதவீதமானது வயிற்று பகுதி அதாவது தொப்பையில்தான் இருக்கும். அது 30 சதவீதமாக மாறும்போது நேரடியாக முதுகுதண்டில் நேரடியான அழுத்தத்தை அது உண்டாக்குகிறது.

உறுதியான தசைகள்
வயிறு தசைகளை விட உறுதியான தசைகள் உடலிலேயே இல்லை. தொப்பையுடைய அழுத்தம் முதுகுதண்டை பாதிக்குமா என கேட்டீர்களேயானால் 100 சதவீதம் பாதிக்கும். இதனால் முதுகுதண்டு பகுதியில் அதிக வலியை உண்டாக்குகிறது.

நிறைய பெண்கள்
பிரசவ காலத்திற்கு பிறகு நிறைய பெண்கள் முதுகு தண்டு வலியால் அவதிப்படுகிறார்கள். அது போல் மாதவிடாய் முடியும் காலத்திலும் பெண்கள் இந்த வலியால் அவதிப்படுகிறார்கள். கழுத்து வரை இடுப்பு வரை மொத்த பகுதியும் சிலருக்கு வலிக்கும்.

10 பல் பூண்டு
இதை சரி செய்வது எப்படி? பூண்டு பால் கசாயம்தான், இதற்கு தீர்வு. 100 மில்லி பால் எடுத்துக் கொண்டு 200 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். அதில் ஒரு 10 பல் பூண்டை போட வேண்டும். பெரிய பூண்டாக இருந்தால் 4 போதும். நன்றாக கொதிக்க வைத்து பாலை சுண்ட வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

கொழுப்பு
இந்த கசாயத்தால் 3 பலன்கள் நமக்கு உள்ளது. வயிற்றில் இருக்கக் கூடிய கொழுப்பை குறைக்கும். வயிற்றில் இருக்கக் கூடிய தசைகளை எல்லாம் உருக்கி மிகப் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். முதுகுதண்டு எலும்புகளையும் தசைகளையும் பலப்படுத்தக் கூடியது.

பாரம் குறையும்
இந்த 3 விஷயமும் நமக்கு நடந்தால், உடலில் உள்ள பாரம் குறைவது போல் முதுகுதண்டு வலிகளும் வேகமாக குறைந்துவிடும். முதுகுதண்டு வலி மிகவும் அதிகமாகி கால் வரை பரவினால் ஒரு 10 சொட்டு விளக்கெண்ணெயை அந்த பூண்டு பால் கசாயத்தில் சேர்த்து சாப்பிட்டால் போதும்.

உணவு
இந்த கசாயத்தை காலை மற்றும் இரவு ஒரு வேளை உணவுக்கு முன்பு நாம் எடுத்துக் கொள்ளலாம். முதுகுதண்டு வலி குறைந்து, தொப்பையும் குறையும். இது ஓரிரு நாட்களில் சரியாகாது, குறைந்தது 3 மாதங்கள் சாப்பிட்டால் வலிகளில் 30 முதல் 50 சதவீதம் குறையும்.
தொப்பை குறைய
வலியும் அதிகமாக இருக்கிறது. தொப்பையும் குறைய வேண்டும் என பார்க்கும் போது மகாராஜ தைலம் அருமருந்தாகும். 20 மிலி அளவுக்கு மகாராஜ தைலத்தை எடுத்து சூடு செய்து இடுப்பு, முதுகுதண்டு பகுதி, முன்புறமுள்ள தொப்பையில் நன்றாக தடவி ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் குளிக்க வேண்டும். அதன்பின்னர் வலிகளும் வேதனைகளும் குறையும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications