டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரொம்பத்தான் குசும்பு... கூட்டணி குறித்து முடிவே பண்ணலையாம்!
எம்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி பதிலளித்துள்ளார்.
-கோயா
சென்னை: 'கூட்டணி பற்றி முடிவு இல்லை' என்று முழு பூசணிக்காயை மூடி மறைத்து பேசியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
இந்த கட்சி என்றில்லாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சி என எல்லாவற்றிலுமே நுழைந்து தனி தொகுதி சீட்டை பெற்றுவிடுவார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. இவரது சீட் விஷயத்தில் கருணாநிதி எப்பவுமே கொஞ்சம் தாராளமாகவே இருந்திருக்கிறார்.
வருகிற எம்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்துசெய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, மேலும், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்தால் தான், முடிவு அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். கூடவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம்
கடந்த 2 மாசமாகவே அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் சார்பில் துண்டை போட்டு ஒரு சீட்டையும் வாங்கிவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தென்காசி
அது மட்டுமில்லை, கிருஷ்ணசாமி, போட்டியிடுவதற்கு தென்காசி தொகுதியை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டு செய்தியாளர்களிடம் இப்படி எதற்கு மறைக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளனவாம்.

அரசியல் லாபம்
அதிமுக-பாஜக தரப்பினரிடையே தன் மகனுக்கும் சேர்த்து ஏதாவது அரசியல் லாபம் கிடைக்குமா என்பது குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு இன்னும் கிட்டாததே கிருஷ்ணசாமி இப்படி பேசுவதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தேர்தல் தேதி
எது எப்படியோ, அதிமுக-பாஜக 2 நாளில் கூட்டணி அறிவிப்பதாகவே வைத்து கொண்டாலும், அதில் தென்காசி தொகுதி புதிய தமிழகத்துக்கு என்று ஒதுக்கினால் கிருஷ்ணசாமியின் முடிவு என்ன?, போட்டியிடாமலேயே ஒதுங்கிவிடுவாரா? அல்லது தேர்தல் தேதி வரட்டும், பிறகு பார்க்கலாம் என்று அதிமுக-பாஜக தரப்புக்கு பதில் அளிப்பாரா? என்பதை பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் முணுமுணுக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications