திமுகவுக்கு கிருஷ்ணசாமி தூது! கலவரமான ‘திராவிட மாடல்’ டிவி நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா?
சென்னை: திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.
வருகின்ற 2024 மக்களைவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வருகிறது.

அதற்கு இணையாகத் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி சுக்கல் சுக்கலாக நொறுங்கி வருகிறது. அந்தக் கூட்டணிக்குத் தலைமை வகித்து வந்த அதிமுக சில மாதங்கள் முன்பாகவே வெளியேறிவிட்டது.
அக்கட்சி வெளியேறின பிறகு, பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறதா? தேமுதிக இருக்கிறதா? புதிய தமிழகம் இருக்கிறதா? என்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் தரக்கூட அங்கே யாரும் இல்லை.
இறுதியாக தேமுதிகவும், பாமகவும் பாஜக கூட்டணியில் இல்லை என்பது மறைமுகமாக விளக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து இன்னும் முடிவுகள் செய்யப்படவில்லை என்று அக்கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அதே நேரத்தில் அதிமுகவுடன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை இரு கட்சிகள் நடத்தி வருவதாகப் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.
இந்நிலையைக் கடந்த 5 ஆண்டுகளாகவே திமுகவை, திராவிட மாடலை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுகவுடன் கூட்டணி அமைக்கத் தூது விட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் பாஜக கூட்டணியில் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை நிறுத்த திட்டமிட்டிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
ஆனால், அத்தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவாளர் ஒருவர் போட்டியிட உள்ளார் என்கிறார்கள். அதற்கான முழு செலவையும் வேம்புவே ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். கூடுதலாக 3 தொகுதிகளில் நிற்கும் பாஜக வேட்பாளர் செலவையும் வேம்புவே கவனித்துக் கொள்ள இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதனால், அந்தத் தொகுதி கிருஷ்ணசாமிக்குக் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி கிருஷ்ணசாமிக்குள் எழுந்துள்ளது. சரி அதிமுக பக்கம் தாவலாம் எனத் தூதுவிட்டுள்ளார். அந்தத் தரப்பிலிருந்து பெரிய ரியாக்ஷன் எதுவும் கிடைக்கவில்லையாம்.
மேலும், பாஜக சார்பாகப் போட்டியிட்டால் தேர்தல் செலவுகளுக்கு அக்கட்சி ஏதேனும் நிதி அளிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் இந்த 2024 மக்களவைத் தேர்தல் தங்களுக்குப் பெரிய அளவில் சாதகமான வெற்றியைத் தராது என்பதை முன்கூட்டியே ஊகித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நிச்சயம் கூட்டணிக் கட்சிகளுக்கு நையா பைசா கொடுக்கப் போவதில்லை. ஆகவே, அங்கே இருப்பதால் பலன் இல்லை என நினைக்கத் தொடங்கி இருக்கிறார் கிருஷ்ணசாமி.
இவரைத் தொடர்ந்து ஜான் பாண்டியனும் தனது மகளை எப்படியாவது எம்.பி ஆக்கிவிட வேண்டும் என்ற பாசப் போராட்டத்தில், திமுக தரப்பு பக்கம் தூது விட்டு வருகிறாராம்.

திமுக கூட்டணி ஏற்கெனவே நிரம்பி வழிகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் சில கடந்த முறையைவிட சில இடங்களைக் கூடுதலாகக் கேட்டு வருகின்றன. அப்படி இருக்கும் போது மேலும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் உள்ளே வந்தால், இடநெருக்கடி காலைக் கடிக்கத் தொடங்கிவிடும்.
ஆகவே, காங்கிரஸ் தலையில் கையை வைக்கலாமா என திமுக தலைமை யோசித்து வருகிறதாம்.
மொத்தம் 80 தொகுதிகள் கொண்ட உபியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கவே சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவர் முடிவு செய்துள்ளார். அவ்வளவு பெரிய மாநிலத்திலேயே காங்கிரசுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கியுள்ள போது, வெறும் 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் எதற்கு 9 சீட்டுகளை காங்கிரசுக்குத் தரவேண்டும்? 5 கொடுத்தால் போதும் என திமுக தரப்பு பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

9 சீட்டுகள் இல்லாமல் கூடவே காங் தலைவர் கே.எஸ். அழகிரி ராஜ் சபா சீட் கேட்பதாகவும் சொல்கிறார்கள். அதை மனதில் வைத்து 5 இடங்களுக்குக் காங்கிரசை வளைத்துப் போட திமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
மேலும் கூடுதல் அதிர்ச்சியை திமுக தரப்பு காங்கிரசுக்குக் கொடுத்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் வெற்றி பெற்ற ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய 5 தொகுதிகளிலும் இம்முறை நான்கு இடங்களில் திமுக நிற்க முடிவு செய்துள்ளதாம். அதுவேறு அக்கட்சிக்குத் தலைவலியாக மாறியுள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில்தான் கடந்த 5 ஆண்டுகளாகவே பாஜக கூட்டணியிலிருந்து வந்த புதிய தமிழகம் திமுக கூடாரத்திற்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது. டாக்டர் கிருஷ்ணசாமி ஆளும் கட்சி திமுகவை இதுவரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தே வந்துள்ளார்.
கோவையில் திமுக அரசு செம்மொழி மாநாடு நடத்துவதற்கு முன்னால் புதிய தமிழகம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அதிலேயே 'திராவிடம்' என்பது தவறான சொற்பிரயோகம் என்று கூறினார் 2011இல் முதல் குண்டை போட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னால் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி, 'திராவிட கருங்காலிகளை ஒழித்துக்கட்டுவோம்' என்று திராவிட கட்சிகளை விமர்சித்திருந்தார்.
அதைப்போலவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்று 'திராவிட மாடலா? தேசிய மாடலா?' என்ற விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. அதில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, 'இந்தப் பெயரிலேயே சிக்கல் இருப்பதாக நான் கருதுகிறேன். தமிழ்நாடு என்று மாநிலத்திற்குப் பெயர் வைத்துவிட்டு, அதை மூடி மறைக்கும் விதமாக 'திராவிட மாடல்' என்ற ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

இதில் சமூகநீதி இல்லை. பொருளாதார முன்னேற்றம் இல்லை. இடஒதுக்கீட்டால் சாதியை ஒழிக்க முடியவில்லை. திராவிடம் என்பது தத்துவமாக இருப்பதற்குப் பதிலாக ஒரு குடும்பத்திற்குள் சுருங்கிப் போய்விட்டது' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த கிருஷ்ணசாமி இரட்டை டம்ப்ளர் கொடுமையில் ஆரம்பித்து கொடியன்குளத்தில் நடந்த கலவரம் வரைப் பட்டியல் போட்டு திமுகவை விமர்சித்தார்.
இவரது பேச்சால் அந்நிகழ்ச்சியே கலவரமானது. திருமாவளவன் எல்லோரையும் அமைதிப் படுத்தினார். அதற்கு அடுத்த நாள் திருமாவளவனை டாக்டர் கிருஷ்ணசாமி மகன் மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அன்றைக்குத் திராவிட மாடலே பொய் என்றவர், தேசிய மாடலே சிறந்தது என்றவர், குடும்பத்திற்குத் திராவிடக் கொள்கை சுருங்கி விட்டது என்று விமர்சித்தவர் இப்போது அதே குடும்ப அரசியலுக்காகவும் தனது மகனை எப்படியாவது எம்.பி ஆக்கிவிட வேண்டும் என்பதற்காகவும் திமுக அணிக்குத் தாவ இருப்பதாகத் தகவல் கசிந்து வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications