தலைகீழாக மாறிய சீன்கள்.. யாருமே எதிர்பார்க்கல.. ஆவேசத்துடன் வந்த டாக்டர் கிருஷ்ணசாமி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் ஃபகத் பாசிலுக்கு மூத்த தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அத்துடன் தன்னுடைய அச்ச உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார்.

மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.

Dr Krishnasamy Puthiya Thamizhagam Party leader Major request to Actor Fahad fazil

உதயநிதி: உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது.
ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

சோஷியல் மீடியா முழுவதுமே, கடந்த சில நாட்களாகவே, பகத் பாசில் டிரெண்டாகிவிட்டார்.. தேவராகவும், கவுண்டராகவும், வன்னியராகவும் அந்தந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் ரத்தினவேல் சீன்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணசாமி: இப்படிப்பட்ட சூழலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, 'மாமன்னன்' திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் டைரக்டர் மாரி செல்வராஜ், சம்பந்தமேயில்லாமல், தேவர் மகன் படத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அதிலிருக்கும் கதாபாத்திரம்தான் மாமன்னன் படத்திலும் வந்திருக்கிறது என்றார்.

இது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்டது... படம் எடுக்க எத்தனையோ கதைக்கருக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும், மறுபடியும் சாதியை வைத்துப் படம் எடுப்பது தேவையில்லாதது.. மாரி செல்வராஜ், நல்ல கதைகளை வைத்துப் படமெடுக்க வேண்டும்.. பகத் பாசில் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிவினைவாதம்: பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். ஆனால், மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்னவேல் பாத்திரத்தை தவறான நோக்கத்துடன் சாதிய பிரிவினைகளை தூண்டும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இது தவறானது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள், வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக, இதை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க, பகத் பாசிலே முன்வந்து உரிய நடவடிக்கை வேண்டும். இல்லாவிட்டால் இதுவே அவருக்கு சட்ட ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்... அவர் நல்ல நடிகர் என்பதால், இதுபோன்ற பிரச்னைகளில் அவர் மாட்டிக்கொள்ளக் கூடாது.. இதை நான் பகத் பாசிலுக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்..

எச்சரிக்கை: அதேசமயம், ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடும், எல்லா ஜாதி இளைஞர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இதுதான் சாதிய மோதலை தூண்டக்கூடிய விஷயம் ஆகும். காலம் மாறிவிட்டது. இப்போதுள்ள காலக்கட்டத்தில் யாரும் யாரையும் அடக்கவோ ஒடுக்கவோ முடியாது. அதற்கு சட்டமும் இடம் தராது.. அதனால், ஜாதி வேறுபாடுகளை மறந்து அனைவரும் மனிதர்கள் என்ற மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+