"இடர்பாடுகள்".. கமலை மறைமுகமாக விமர்சித்த டாக்டர் மகேந்திரன்?.. அறிக்கையை கவனித்தீர்களா?
சென்னை: திமுகவில் ஐக்கியமான டாக்டர் மகேந்திரன் தனது அறிக்கையில் கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். கோவையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளை குவித்து திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கமலுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்றவர் மகேந்திரன்.

தோல்விக்கான காரணம்
ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் தோற்றதற்கான காரணத்தை ஆலோசனை செய்து அந்த தவறுகளை அடுத்த தேர்தலில் களைய முற்படும். அது போல் கமல்ஹாசனும் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வேட்பாளர்கள்
அப்போது கட்சி தோல்வி அடைந்ததற்கு மற்ற நிர்வாகிகளும் வேட்பாளர்களும்தான் காரணம் என்பதை போல் கமல் பேசியதாக தெரிகிறது. மேலும் கமல் நிர்வாகிகள் பேச்சை கேட்காமல் கார்பரேட் நிறுவனத்தின் பேச்சை கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மகேந்திரன் விலகல்
இதையடுத்து மகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் திமுகவில் இணைந்தார். அவருடன் மதுரவாயல் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்ம ப்ரியாவும் இணைந்தார். இந்த நிலையில் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை விட்டிருக்கிறார்.

மக்கள்
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எனது மக்கள் பணி தொடரும் என தெரிவித்துள்ளார். அதில் பெரும் எதிர்பார்ப்புடன் எனது அரசியல் பயணத்தை துவக்கிப் பயணிக்கையில் சில இடர்பாடுகள் என் மக்கள் சேவையைத் தடுக்கத் தகர்க்கத் துணிந்தது. நல்லவை எண்ணம் வேண்டும், எண்ணிய முடிதல் வேண்டும் என்கிற திண்ணிய நெஞ்சத்துடன் முன்பை விட துரிதமாக பயணிக்கத் தொடங்கினேன் என அந்த அறிக்கையில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மறைமுக விமர்சனம்
இதன் மூலம் கமல்ஹாசனை மறைமுகமாக மகேந்திரன் விமர்சித்துள்ளார். எல்லா கட்சியின் சட்டைகளையும் வாங்கி வைத்து கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம












Click it and Unblock the Notifications