தயங்காம தடுப்பூசி போடுங்க.. தானாக கோவிட் ஓடுங்க.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விழிப்புணர்வு பாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா குறித்தும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் டாக்டர் முத்து செல்லக்குமார் பாடலை எழுதியுள்ளார்.

தயங்காம தடுப்பூசி போடுங்க.. தானாக கோவிட் ஓடுங்க... என கோவிட் குறித்த விழிப்புணர்வு பாடலை பேராசிரியர் டாக்டர் முத்து செல்லக்குமார் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய பாடல் வரிகள் பின்வருமாறு:

 Dr Muthu Chellakumar penned Corona awareness song

பயப்படாம போடுங்கப்பா தடுப்பூசி
பயந்து ஒதுங்கினா பிடிக்கும் கொரோனா வலைவீசி!

பயப்படாம போடுங்கம்மா தடுப்பூசி
பட்டதெல்லாம் போதும்ன்னு நடக்கலாம்- இனி கை வீசி!

கோவிஷீல்டு வேணுமா
கோவாக்சின் வேணுமா சொல்லுங்க

கோவிட்டை இனியாவது வெல்லுங்க...
(பயப்படாம...)

ஊசி போட்டா ஆபத்துன்னு வதந்தீங்க- இது
ஊர் சுற்றும் விஷமிகளின் வதந்தீங்க

எமனோடு போராடுகிற கேமுங்க
இதுக்கு ஏகே 47 நம்ம வேக்சின் தாணுங்க

ஊரு பூராம் பரவிடுச்சு கோவிட்
உயிரைக் கொடுத்து கவர்மென்டும் உழைக்குது மெனக்கெட்டு

மீண்டும் ஏறிக்கிட்டே போகுதுங்க கிராஃப்- இதுக்கு
எல்லோரும் சேர்ந்து வைக்கணும் ஆப்பு
(பயப்படாம...)

காட்டு விலங்கு உடம்பிலே
calm ஆகத்தானே இருக்குது
நாட்டு விலங்கு நம்மலே
ஏன் பாடாய்படுத்தி எடுக்குது?

passport எடுக்காம பறக்குது
airport இருந்தாலே
அங்கே இருக்குது !

விசா, கிசா எதுவுமில்லை ஜோபிலே
கொரோனா விசிட் பண்ணாத நாடில்லே மேப்பிலே
(பயப்படாம....)

கோயம்பேடு, காசிமேடு மார்க்கெட் அதுதானே
கோவிட்டின் டார்கெட்!

இன்னும் கல்யாணம், காதுகுத்து, கச்சேரி என
எல்லாயிடத்திலேயும் போடுறீங்க ஒரு கூட்டம்
அங்கெல்லாம் கொரோனா போடும் ஒரு ஆட்டம்!

தாடைக்கு மட்டும் போடும் மாஸ்க்
தவறாக நீங்க எடுக்கும் ரிஸ்க்

கைகழுவுவறதை கைகழுவி நாளாச்சு
சமூகஇடைவெளி இப்போ என்னாச்சு?

மாஸ்க் போட்டு நடந்தாலே
மாஸ் தான்! மரண மாஸ் தான்
சோப்பு போட்டு போனாலே பாஸ் தான்
நீ பிக்பாஸ்தான்

கேப்விட்டு சென்றாலே
ஹோப்தான்! சூப்பர் ஹோப் தான்!

வெள்ளைக்காரன்
வேக்சின் போட
க்யூவில் நிக்குறான்
இங்கு
கூவி.. கூவி.. கூப்பிட்டாலும்
ஊரைச் சுற்றி நோயைப் பரப்புறான்!

உருமாறி வருதுங்க கொரோனா- இன்னும்
தடுமாறி நின்னா இது தகுமா?
(பயப்படாம...)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+