தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 14000 ரூபாய் பணம் பெறுவது இனி ரொம்ப ஈஸி
சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மாற்றங்களுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி, கர்ப்பிணி பெண்களுக்கு 14000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி' எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். 4-வது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

மேலும், ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகங்கள் அரசு சார்பில் இரண்டு முறை வழங்கங்படும். அதன்பின்னர் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.14,000 ரொக்கம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். அதேபோல் மொத்தம் ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படும். அதாவது 14000 +4000 என அரசு வழங்கி வந்தது.
இந்த திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. ஒரு சிலருக்கு 4000 வரையிலும், ஒரு சிலருக்கு 8000 ஆயிரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்து வந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை என்றும், அதற்கு காரணம் கேட்டால், பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் பதிவு செய்த பெயர் என இரண்டும் சரியாக இருப்போருக்கு மட்டும் உதவி தொகை கிடைப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேநேரம் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த விளக்கத்திற்கு அப்போது கடும் எதிர்ப்பும் எழுந்தது. இணையதள சர்வர் குறைபாட்டை சரி செய்ய 2 ஆண்டுகளாகுமா என்றும் அப்போது கேள்வி எழுப்பினார்கள். இந்த திட்டத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடுமையான புகார்கள் அப்போது எழுந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்களை அரசு செய்திருக்கிறது.. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மாற்றங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதாவது தற்போது வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படும். எப்படி என்றால். கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். பேறு காலத்தில் மூன்றாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். அதேபோல் ஆறாவது மாதத்தில் ஒரு முறை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications