பையனுக்கு தொந்தி இருக்கா? உடல் பருமன் ஆகுதா? கண்ட்ரோல் பண்ண என்ன வழி? எச்சரிக்கும் மருத்துவர்!
சென்னை: வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பிருப்பது தான் பிற்காலத்தில் நோய்கள் வருவதற்கான முக்கியக் காரணம் என எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி.
பள்ளி மாணாக்கர்களிடம் அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்தும் அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றியும் மருத்துவர் புகழேந்தி விடுத்துள்ள பதிவு வருமாறு;
''சென்னையில் 2022ஆம் ஆண்டு ஜூலை 14 முதல் 17 ஆம் தேதி வரை 5 வயது முதல் 17 வயதுடைய 1,124 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 19.50% மாணவர்களுக்கு தொந்தி இருப்பதும், 21.08% மாணவர்கள் அதிக பருமனுடனும் இருப்பது தெரிய வந்துள்ளது.

மொத்த மாணவர்களில், 667 பேர்(59.3%) வழக்கமான எடை கொண்டவர்களாகவும், 237 பேர்(21.08%) அதிக எடை(Overweight)கொண்டவர்களாகவும்,220 பேர் (19.50%) தொந்தி உடையவர்களாகவும் (Obese) ஆய்வில் கண்டறியப்பட்டனர். வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பிருப்பது(Central Obesity) தான் பிற்காலத்தில் நோய் வருவதற்கான முக்கிய அறிகுறியாக உள்ளது.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படாமல் போனால், அடுத்த தலைமுறையினர் மத்தியில் அதிக எடை+ தொந்தி கொண்டவர்கள் அதிகரித்து, சர்க்கரை நோய், இதயப் பிரச்சனை மக்களிடையே அதிகரிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும்.
மாணவர்களிடையே அதிக உடல் எடை+தொந்தி அதிகரிக்கக் காரணங்கள்:
1) உடற்பயிற்சியின்மை
2) கொழுப்பு நிறைந்த துரித உணவுகளின் மீது அதிகம் நாட்டம்
3) செல்போன்+டி.வி.+கம்ப்யூட்டர் போன்ற பொருட்களின் மீது அதிக கவனம்/பயன்பாடு
4) வீட்டிற்கும்,பள்ளிக்கும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பயணித்தல்(நடந்து செல்வது குறைந்து வருகிறது.)
5) படிப்பில் தேர்ச்சி என்ற பெயரில் விளையாட்டு+உடற்பயிற்சிக்கு போதிய முக்கியத்துவமின்மை
6) நொறுக்குத்தீனிகளின் மீது அதிகநாட்டம் (அவற்றில் உப்பு+கொழுப்பு மிகையாக உள்ளது.)
இத்தகைய போக்கு அதிகரித்தால் மாணவர்கள் பெரியவர்களாக வளரும் போது, அவர்கள் மத்தியில் சர்க்கரைநோய், இருதயப் பிரச்சனைகள், மூளை பாதிப்பு, போன்ற பிரச்சனைகள் அதிகமாகலாம். ஆக இப்போதே அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இது International Journal of Contemporary Paediatrics பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வுகள்:
1) உடற்பயிற்சி/நடைப் பயிற்சியை மாணவர்கள் மத்தியில் அதிகப்படுத்துதல்
2) அதிக கொழுப்பு உள்ள துரித உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்
3) செல்போன்,கம்ப்யூட்டர்,டி.வி. நேரத்தை குறைத்தல்,
4 )அருகில் உள்ள பள்ளிகளுக்கு நடந்து/மிதிவண்டியில் செல்வதை ஊக்குவித்தல்(சாலையில் அதற்கான பாதைகளை உருவாக்குதல்)
5) பள்ளியில் உடற்பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தல்
6) வீட்டிற்கு அருகில் உள்ள கடை/இடங்களுக்கு செல்லும் போது நடப்பது/மிதிவண்டியின் பயன்பாட்டை ஊக்குவித்தல்
7) சுவைக்கான உணவு என்றில்லாமல் சத்தான சரிவிகித உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் Drexel பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், 2 வயது நிரம்பிய குழந்தைகள் கூட டிவியை அதிக நேரம் பார்ப்பது, அவர்கள் மத்தியில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிய வருகிறது. நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்பதை உணர்ந்து அரசும்/மக்களும் இணைந்து மாணவர்களிடம் அதிகரித்து வரும் உடல்பருமன் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும்.'' இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications