சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் பல்கலை.யில் ஜாதிய வன்மத்துடன் வினாத்தாள்- கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் கேள்வி கேட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஜாதி தொடர்பான கேள்வி பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Dr Ramadoss condemns for Periyar Universitys controversy Question Paper

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது

வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் . இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Recommended Video

    பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி கேள்வி.. இதுதான் திராவிட மாடலா?- எதிர்க்கட்சிகள் கேள்வி.

    இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இந்த சர்ச்சைக்குரிய வினாத்தாள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    English summary
    PMK Founder Dr Ramadoss has condemned for the controversy on Periyar University exam Question Papers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X