கோலாகலமாக நடந்த முத்து விழா.. வாழ்த்து சொன்ன ஸ்டாலின், வைகோ, சீமானுக்கு ராமதாஸ் நன்றி
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: முத்து விழாவையொட்டி தனக்கு வாழ்த்து சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி கூறியுள்ளார்.
சமீபத்திய கூட்டணி நேரத்தின்போது, "சூடு சொரணை இருக்கா, வெட்கம் இருக்கா என்று ராமதாஸை பார்த்து தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
எதையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் அணுகும் ஸ்டாலினா.. வயதிலும், அனுபவத்திலும் மூத்த ராமதாஸை பார்த்து இப்படி கேட்பது என்ற அதிர்ச்சி மக்களிடம் ஏற்பட்டது. எனினும், கூட்டணி வைக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் ஸ்டாலினின் பேச்சு பார்க்கப்பட்டது.

வாழ்த்து
இந்த நிலையில், நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. டாக்டரின் பிறந்த நாளுக்கு முதல்வர் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து சொல்லி இருந்தார்கள். இதில் முக ஸ்டாலினும் "அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டது மிகவும் கவனிக்கப்பட்டது. மாற்று கட்சியாக இருந்தாலும், கொள்கை முரண்பாடு இருந்தாலும், ஸ்டாலின் ராமதாசுக்கு வாழ்த்து சொல்லி இருந்ததை அரசியல் நாகரீகமாக பார்க்கப்பட்டது!
|
நன்றி சொன்ன ராமதாஸ்
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டரில் நன்றி சொல்லி உள்ளார். அதில், "தொலைபேசி மூலம் முத்துவிழா வாழ்த்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, சமூக ஊடகம் வாயிலான வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
முக நூலிலும் வாழ்த்து
அதேபோல முக நூல் பக்கத்திலும் டாக்டர் ராமதாஸ் தனக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு விரிவாக நன்றி சொல்லியுள்ளார். அதில், முத்துவிழாவில் வாழ்த்திய தலைவர்கள், நல் உள்ளங்களுக்கு என் நன்றிகள்! பாட்டாளி சொந்தங்களின் விருப்பப்படி எனது 80 ஆவது பிறந்தநாள் விழா முத்து விழாவாக சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. எனது பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் செய்தி மற்றும் மலர்க்கொத்து அனுப்பியதுடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வாழ்த்துச் செய்தி மற்றும் மலர்க்கொத்து அனுப்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துவிழா அரங்குக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், இல்லத்திற்கு வந்து வாழ்த்திய சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.- முத்து விழா மலருக்கு வாழ்த்துச் செய்திகளும், கட்டுரைகளும் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருவேற்காட்டில் நடைபெற்ற முத்துவிழாவுக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தவறுக்கு வருந்துகிறோம்
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவிக்கவில்லை என்று நமது செய்தியில் தவறாக வந்து விட்டது. நடந்த தவறுக்கு வருந்துகிறோம்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications