ஒரே தொகுதியில் 9 முறை எம்எல்ஏவா?- யாரு எடப்பாடியா?- பாட்டி கதை சொல்றாப்லல இருக்கு!- ராமதாஸ் நக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னாது, எடப்பாடி 9 முறை அதுவும் ஒரே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க டெல்லி சென்றிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அப்போது டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் 9 முறை ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பல தரப்பினரிடம் இருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

தோல்வியும்

தோல்வியும்

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரே தொகுதியில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்: எடப்பாடி - அப்படியா... எம்.பி.க்கும், எம்.எல்.ஏவுக்கும் சேர்த்து போட்டியிட்டதே 9 முறை தானே? அதில் 4 தோல்வியும் அடங்குமே?

தகுந்த பதிலடி

தகுந்த பதிலடி

விடுங்க... பிள்ளைகளுக்கு பாட்டி கதை சொல்வது போல தில்லி பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார்! என விமர்சனம் செய்துள்ளார். இதுபோல் அமைச்சர்கள் பேச்சுக்கும் ராமதாஸ் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.

நலத்திட்டங்கள்

நலத்திட்டங்கள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக இளைஞரணியின் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+