சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடிகாரம்.. முட்கள்.. அதை நீயும் செய்.. தொடர்ந்து செய்.. எஸ் பாஸ்.. ராமதாஸ் டிவீட்டேதான்!

கடிகாரம், முட்கள் என பொன்மொழிகளுடன் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் காணோமே என்று எதிர்பார்த்துகொண்டே இருந்த நிலையில், இன்று ட்வீட் போட்டுவிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தேர்தல் நெருங்கி வருகிறது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி சொல்லிவிட்டன. இதில் புதிதாக வந்த கமல் முதற்கொண்டு சீமான் வரை தனியாக நிற்க போகிறோம் என்றுகூட அறிவித்து விட்டார்கள்.

ஆனால் இதுவரை பாமக வாயே திறக்கவில்லை. யூகத்தின் அடிப்படையிலும் யாரும் கூட்டணி பற்றின எந்த எந்த செய்தியும் எழுத கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். அவரும் பகிரங்கமாக இதுவரை சொல்லவில்லை.

பழமொழி

பழமொழி

அதனால் பாமகவின் நிலைப்பாடு இன்றைய தேதி வரை தெரியவில்லை என்றாலும் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை மட்டும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வழக்கம்போல வெளிநாட்டு பொன்மொழிகளுடன் இதை பதிவிட்டுள்ளதால், மக்களும் வழக்கம்போல் தங்களுக்கேற்ற வகையில் இந்த பழமொழியின் கருத்தை ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்கிறார்கள்.

சாம் லெவென்சன்

இன்றைய ட்வீட்டில், "கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்காதே. கடிகாரத்தின் முட்கள் என்ன செய்கின்றனவோ, அதை நீயும் செய். தொடர்ந்து செய்து கொண்டிரு!- சாம் லெவென்சன்" என்று பதிவிட்டுள்ளார்.

முட்கள் யார் யார்?

முட்கள் யார் யார்?

இப்போது சந்தேகம் என்னவென்றால், கடிகாரம் என்பது எது? முட்கள் என்பது என்ன? என்பதுதான். கடிகாரம் என்பது பாமக என்று எடுத்து கொண்டால், முட்கள் என்பது திமுக, அதிமுகவாக இருக்குமோ என தெரியவில்லை.

இரு முட்கள்

இரு முட்கள்

ஒருவேளை கடிகாரம் என்பது பாஜக என்றால், இரு முட்களில் ஒரு முள் பாமகவாக இருக்குமோ என்றும் தெரியவில்லை.

ஓடினால் சரி

ஓடினால் சரி

திராவிட கட்சிகள் இரண்டிலுமே பாமக அங்கம் வகித்துவிட்டதால், இந்த முட்கள் என்று கூறுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. டாக்டர் என்ன சொல்ல வருகிறார் என்று இந்த பழமொழியிலும் புரியவில்லை. ஏதோ... கடிகாரம் நிற்காமல் சரியாக ஓடினால் சரி.

English summary
PMK Founder Dr.Ramadoss's another confusing tweet about the Clock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X