"எட்டு" கிடைத்த சந்தோஷம்.. "லட்டு" போல ட்வீட் போட்டு கலகலக்க வைக்கும் டாக்டர்!
பொறாமை குறித்து டாக்டர் ராமதாஸ் 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஒரு பக்கம் கேட்ட சீட் கிடைக்காமல் தேமுதிக திண்டாடி கொண்டிருக்கிறது, மறுபக்கம் சூடு, சொரணை இல்லையா என்று தகாத வார்த்தைகளை ஸ்டாலின் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே எந்தவித பரபரப்பும் இன்றி கூலாக ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்!!
நேற்றுதான் நீண்டகால கூட்டணி இழுபறிக்கு ஒரு முடிவு வந்தது. கேட்டதைவிட அதிமுக அதிகமாக தந்ததா, அல்லது கேட்ட சீட் அத்தனையையும் அதிமுக தந்துவிட்டதா என தெரியவில்லை. எப்படியோ 7 +1 ஒன்று வாங்கி விட்ட களிப்பில் இருக்கிறார் ராமதாஸ். அதான் ஒன்றுக்கு மூன்றாக ட்வீட்கள் வந்து விழுந்திருக்கிறது.
டாக்டர் இன்று எடுத்துள்ள டாப்பிக் பொறாமை.. ஆஹா.. சரியான நேரத்தில் சரியான டாப்பிக்கைத்தான் டாக்டர் அய்யா எடுத்துள்ளார் என்று பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.
|
3 ட்வீட்கள்
ஒரு டிவீட்டில், "பொறாமை என்பது ஒரு மனப் புற்றுநோய்!- பி.சி. போர்ப்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
|
பாதுகாப்பின்மை
இன்னொரு ட்வீட்டில் "திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எதன் மீதும் பொறாமை ஏற்படாது. பொதுவாகவே பொறாமை என்பது நாடி நரம்பெல்லாம் பாதுகாப்பின்மை ஊறிப்போனதன் அறிகுறி தான்! - ராபர்ட் ஏ.ஹெய்ன்லெய்ன்" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
|
வதம் செய்துவிடும்
மற்றொரு ட்வீட்டில்"பொறாமை என்பது ஏவப்படுபவர்களுக்கு சில தொந்தரவுகளை உண்டாக்கும்; அதே நேரத்தில் பொறாமைப்படுபவர்களை அது வதம் செய்து விடும்!- வில்லியம் பென்" என்று பதிவிட்டுள்ளார்.

ராத்திரி 12 மணி
இந்த 3 ட்வீட்களையுமே நேத்து ராத்திரி கிட்டத்தட்ட 12 மணிக்கு பதிவிட்டு இருக்கிறார் டாக்டர். மூன்றுமே பொறாமை குறித்த பொன்மொழிகள்தான். மூன்றுமே வழக்கம்போல் வெளிநாட்டு பொன்மொழிகள். ஆனால் வழக்கம்போல் குழப்பமாக இல்லாமல், யாருக்கு பொறாமை என்று சொல்கிறார் என்பது தெளிவாக உள்ளது.

யாருக்கு பொறாமை?
இது திமுகவினருக்கும் நன்றாகவே புரியும் என்றாலும், இன்னொரு பக்கம் இதே பொறாமை பாஜகவுக்கும் இருக்குமே... ஏன்.. தேமுதிகவுக்கும் இருக்கிறதே... பிறகு எப்படி இது அந்த "ஒருவருக்கு" மட்டும் பொருந்தும் என்று எடுத்து கொள்வது?! ஒருவேளை எல்லாருக்கும் சேர்த்துதான் டாக்டர் பதில் சொல்லி இருப்பாரோ?!
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications