பயப்பட கூடாது.. தைரியமா இருக்கணும்.. பயத்திலிருந்து கத்துக்கணும்.. யாருக்கு சொல்கிறார் ராமதாஸ்
துணிச்சல் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: "யாரும் பயப்படாதீங்க.. துணிச்சலா இருக்க கத்துக்குங்க" என்று தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை சொல்லி இருக்கிறார்.
வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தினம் தினம் இறங்கிவிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதனால் நித்தம் ஒரு நல்ல விஷயங்களை உதிர்த்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பொன்மொழிகளாக பதிவிட்டு வருகிறார். அதன்படி டாக்டர் எடுத்து கொண்ட இன்றைய தலைப்பு "துணிச்சல்"!

நெல்சன் மண்டேலா
"நான் எனது துணிச்சலை பயம் இல்லாத சூழலில் கற்றுக்கொள்ளவில்லை, மாறாக பயத்தை வெற்றிக் கொண்டதால் கற்றுக் கொண்டேன். துணிச்சலான மனிதன் என்பவன் பயப்படாதவன் அல்ல... பயத்தை வெற்றி கொண்டவனே துணிச்சலான மனிதன்! - நெல்சன் மண்டேலா" என்று பதிவிட்டுள்ளார்.
|
புது ட்வீட்
நல்ல செய்திதான்.. வழக்கம்போல் ஒன்றே ஒரு சந்தேகம்தான்! யார் பயந்து கிடக்கிறார்கள், யாருக்கு இந்த துணிச்சல் தேவைப்படுகிறது என்பதுதான் புரியவில்லை.

பயமா?
2 நாளைக்கு முன்னாடி தோல்வி பயத்தால் வாயில் விஷவாயுக்களை பரப்புகிறார்கள் என்று டாக்டர் ட்வீட் போட்டிருந்தார். இப்போது பயத்தை வெற்றி கொள்ளுங்கள் என்று சொன்னால், யாருக்கு ,இதை சொல்கிறார் என்பதுதான் குழப்பமே!

குழப்பமா இருக்கு
அதேபோல, துணிச்சல் வேண்டும் என்கிறார். எந்த மாதிரியான துணிச்சல்? மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டும் என்பதிலா? யார் எவ்வளவு விமர்சனம் செய்தாலும் எதையும் காதிலே போட்டு கொள்ளாமல் துணிந்து செயல்படுங்கள் என்கிறாரா என்பதுதான் குழப்பமாக உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications