போர்க்களம்னாலே குழப்பம்தான்.. ராமதாஸ் மெசேஜ்.. யாருக்கு?.. யாருக்கோ!!
குழப்பம் என்ற தலைப்பில் டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: போர்க்களம்.. குழப்பம்.. வெற்றி... எதிரி... குழப்பம்... என்ன குழப்பமா இருக்கா? இந்த ட்வீட்டே குழப்பம் பற்றினதுதான்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 7+1 வாங்கின குஷியில் படு மும்முரமாக உள்ளார். வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது வரை மும்முரமான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் "தினம் ஒரு குறள்" மாதிரி தினம் ஒரு பழமொழி என்று இறங்கிவிட்டார்.
எல்லா பழமொழிகளும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவைதான்.
இன்றைய பொன்மொழியின் தலைப்பு "குழப்பம்"!
தனது ட்விட்டர் பக்கத்தில், "போர்க்களம் என்பது தொடர்ச்சியான குழப்பங்கள் நிறைந்தது. எவர் ஒருவர் தனது தரப்பில் மட்டுமின்றி, எதிரித் தரப்பின் குழப்பத்தையும் கட்டுப்படுத்துகிறாரோ, அவர் தான் வெற்றியாளராக இருப்பார்! - மாவீரன் நெப்போலியன்" என்று பதிவிட்டுள்ளார்.
போர்க்களம் என்பது தொடர்ச்சியான குழப்பங்கள் நிறைந்தது. எவர் ஒருவர் தனது தரப்பில் மட்டுமின்றி, எதிரித் தரப்பின் குழப்பத்தையும் கட்டுப்படுத்துகிறாரோ, அவர் தான் வெற்றியாளராக இருப்பார்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 9, 2019
- மாவீரன் நெப்போலியன்
வழக்கம்போல்தான்.. ஒரே ஒரு சந்தேகம்.. குழப்பம் என்று டாக்டர் ஏதை சொல்கிறார்? 7 தொகுதிகளில் யாரை நிறுத்தலாம், குறிப்பாக தருமபுரி தொகுதிக்கு அன்புமணியா? சவுமியாவா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? அல்லது தொடர்ச்சியான தடாலடிகள் உள்ளதால் தேமுதிகவில் குழப்பம் என்கிறாரா? அல்லது தேமுதிகவை கூட்டணிக்குள் வேண்டாம் என்று சொல்லியும் நாளை வரை கெடு விதித்துள்ள அதிமுகவை சொல்கிறாரா என்று தெரியவில்லை.
ஆனால் குழப்பத்தை எல்லாம் கட்டுப்படுத்துபவர்தான் வெற்றியாளர் என்று டாக்டர் சொல்வதால், அநேகமாக முதல்வர் எடப்பாடியைத்தான் சொல்வது போல இருக்கிறது! எப்படியோ யாராவது ஒருத்தர் ஜெயிச்சா சரி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications