மாமியார் சொன்னா என்ன.. மருமகள் சொன்னா என்ன.. பிச்சைக்காரனுக்கு சோறு இல்லையாம்.. ராமதாஸ் நக்கல்!
காங்கிரசின் நீட் தேர்வு குறித்த அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: "மாமியார் சொன்னால் என்ன? மருமகள் சொன்னால் என்ன? பிச்சைக்காரனுக்கு சோறு இல்லையாம். அதுபோலதான் நீட் தேர்வு ரத்து என்பதும்" என்று டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
ரொம்ப நாள் ஆச்சு.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கம் வந்து! தேர்தல் பிரச்சார பிஸியில் இருந்தும், இப்போது திடீரென ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அது நீட் தேர்வு ரத்து என்று நேற்று காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பு பற்றியது. நீட் தேர்வு குறித்து பெருமளவு விமர்சித்து கண்டித்து வந்தவர் டாக்டர் ராமதாஸ்தான். சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் செயல் என்று காட்டமாகவே சொல்லி வந்தவர்.
இப்போது தனது ட்வீட்டில், "நீட் தேர்வு ரத்து. ஆனால், நுழைவுத் தேர்வு உண்டு: காங். தேர்தல் அறிக்கை -பிச்சைகாரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள். அதைக்கேட்ட மாமியார், பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, ''அதெப்படி அவள் சொன்னால் நீ கேட்கலாம். இப்போ நான் சொல்கிறேன். சோறு இல்லை நீ போ" என்றாளாம். இதுவும் அப்படித் தான்!" என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு ரத்து. ஆனால், நுழைவுத் தேர்வு உண்டு: காங். தேர்தல் அறிக்கை -பிச்சைகாரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள். அதைக்கேட்ட மாமியார், பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, ’’அதெப்படி அவள் சொன்னால் நீ கேட்கலாம். இப்போ நான் சொல்கிறேன். சோறு இல்லை நீ போ” என்றாளாம். இதுவும் அப்படித் தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) April 2, 2019
வழக்கம்போல் ஒரு சந்தேகம்.. நீட் தேர்வை கொண்டு முதன்முதலில் வந்தது யார் என்று தெரிந்துதான் இந்த பதிவை டாக்டர் போட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த பதிவிற்கு கீழே நிறைய கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. "டாக்டர் உங்களுக்கு ஒரு எளிய கேள்வி நீங்கள் நீட்டை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?" என்று ஒரு பதிவு உள்ளது.
டாக்டர் உங்களுக்கு ஒரு எளிய கேள்வி நீங்கள் நீட்டை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
— ஆனந்த் கேசவ் (@ananthkesav) April 2, 2019
"யாரு பேசறது... ஓ... அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயை புனர்வதற்கு சமமின்னும், என் வீட்டில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் வச்சி சவுக்கால் அடிங்கன்னும் சொன்ன ராமதாஸ் அய்யாவா...அப்போ சரி.. சரி..." என்கிறது மற்றொரு ட்வீட்
யாரு பேசறது...
— V Rajavelu Raja (@Rajamalarvelu) April 2, 2019
ஓ... அதிமுக வுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயை புனர்வதற்கு சமமின்னும் , என் வீட்டில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் வச்சி சவுக்கால் அடிங்கன்னும் சொன்ன ராமதாஸ் அய்யாவா...
அப்போ சரி.. சரி...
"ஓரமா கமெடின்னு எழுதியாவது வை தெய்வமே" என்கிறது இன்னொரு பதிவு.
— பேரு வைக்கல (@HavocRabin) April 2, 2019
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications