அப்படின்னா டாக்டர் சொன்ன "மாற்றம்.. முன்னேற்றம்" இதுதானோ?
வெற்றி - முன்னேற்றம் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: சும்மாவே ட்வீட் போட்டு தெறிக்க விடுவார் ராமதாஸ்! இன்னைக்கு செம குஷியில் இருப்பதால் மீண்டும் ட்வீட் போட்டுள்ளார்.
இன்று அனைவரும் எதிர்பார்த்தபடியே அதிமுக-பாமக கூட்டணி ஏற்பட்டுவிட்டாலும், யாருமே எதிர்பார்க்காதபடி தொகுதி பங்கீடு சமாச்சாரங்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.
இதனால் தங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாகி உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி உறுதி என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
|
மாற்றம்
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "ஒன்று சேர்வது தான் தொடக்கம்; ஒன்றாகவே இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக உழைப்பது தான் வெற்றி!- எட்வர்ட் எவரெட் ஹால்" என்று பதிவிட்டுள்ளார்.

நன்றாக புரிகிறது
வழக்கமான வெளிநாட்டு பொன்மொழி என்றாலும், ஒன்றுசேர்வது, முன்னேற்றம், வெற்றி என்று குறிப்பிடப்பட்டு இந்த ட்வீட் எவ்வளவு அழகாக நமக்கு புரிகிறது. ஆனால் இவ்வளவு நாள் அப்படி இல்லையே? ராமதாஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதற்கே திணற வேண்டி இருந்தது.

ஒன்றுசேர்வது?
ஆனால் ஒரு சந்தேகம்.. "ஒன்றுசேர்வது தொடக்கம்" என்கிறார். 1998-லேயே நடந்து முடிந்து... பிறகு 2001-ல் மீண்டும் நடந்து... அதன்பின்னர் 2009-ல் திரும்பவும் ஆரம்பித்து... கடைசியாக 2019-ல் வந்து மறுபடியும் முடித்திருக்கும்போது, இதை எப்படி "தொடக்கம்" என்று எடுத்து கொள்வது என்றுதான் புரியவில்லை.

முன்னேற்றம்
அதேபோல, "மாற்றம் முன்னேற்றம்" என்ற முழக்கத்தினை எழுப்பி வரும் நிலையில், "மாற்றம்" மட்டும் மாறாமல் தொடர்கிறது என்பதும், அதில்தான் "முன்னேற்றம்" இருக்கிற மாதிரியும் ஏதோ நமக்கு லேசாக மனதில் தோன்றுவது போல உள்ளது... ஒன்று மட்டும் புரிகிறது.. மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது என்பதே அது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications