இலக்கு நோக்கி நடை போடுங்க.. பரிசு கிடைக்கும்.. டாக்டர் ராமதாஸ் டிவீட்
இலக்கு குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: "உங்கள் இலக்கில் நீங்கள் உறுதியாக பயணித்தால், அவ்வளவும் பரிசுகளாக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்" என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்.
வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தினம் தினம் இறங்கிவிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ். அதனால் நித்தம் ஒரு நல்ல விஷயங்களை உதிர்த்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பொன்மொழிகளாக பதிவிட்டு வருகிறார். அதன்படி டாக்டர் எடுத்து கொண்ட இன்றைய தலைப்பு "இலக்கு"!
"நீங்கள் உங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, உங்களால் எந்த அளவுக்கு உறுதியுடன் அதை நோக்கி பயணிக்க முடியுமோ, அந்த அளவுக்கு பயணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுக்கு கிடைக்கும் பரிசுகள் உங்களை ஆச்சரியப்படவைக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லும்! - லெஸ் பிரவுன்" என்று பதிவிட்டுள்ளார்.
நீங்கள் உங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, உங்களால் எந்த அளவுக்கு உறுதியுடன் அதை நோக்கி பயணிக்க முடியுமோ, அந்த அளவுக்கு பயணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுக்கு கிடைக்கும் பரிசுகள் உங்களை ஆச்சரியப்படவைக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 28, 2019
- லெஸ் பிரவுன்
ஆனால் வழக்கம்போல் ஒரே கேள்விதான்... இலக்கு யாருக்கு? என்பதுதான். ஏனென்றால் பாமகவின் இலக்கு தேர்தலுக்கு தேர்தல் மாறி கொண்டே இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இது தொண்டர்களுக்கான மெசேஜ் ஆக இருக்காது போல் தெரிகிறது. அப்படி இலக்கு என்ற ஒன்றே தொண்டர்களுக்கு நிலையாக இல்லாமல் இருக்கும்போது, அதன் பரிசுகள் மட்டும் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.
7+1 மற்றும் "இதர பிற சமாச்சாரங்களை" பரிசாக பெற்றது கண்டிப்பாக தொண்டர்களாக இருக்காது என்று மட்டும் தெளிவாக தெரிவதாக கமெண்ட்கள் குவிகின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications