வெட்கமில்லை.. வெட்கமில்லை.. யாருக்கும் இங்கு வெட்கமில்லை.. ராமதாஸ் நறுக்
டாக்டர் ராமதாஸ் செந்தில்பாலாஜியை தாக்க ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: "வெட்கமில்லை... இங்கு யாருக்கும் வெட்கமில்லை..." என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
கமலை போலவே ராமதாஸின் ட்வீட்கள் இப்போது சரிவர புரியாமல் போய்விட்டது. ஏற்கனவே பேரிக்காய் பழம் பற்றி ஒரு ட்வீட் போட்டார்.
"பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்து கொண்டிருந்தான். அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும்.பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! - ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்." என்று பதிவிட்டார். இவர் யாரை சொல்கிறார், எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றே புரியாமல் இருந்தது.
|
வெட்கமில்லை..
இப்போது இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார் ராமதாஸ். அதில், "வெட்கமில்லை... இங்கு யாருக்கும் வெட்கமில்லை. இதற்கான விளக்கத்தை நான் சொல்லத் தேவையில்லை. அரசியல் அறிந்தவர்கள், நாளேடு படிப்பவர்கள், பிரேக்கிங் செய்தி பார்ப்பவர்கள் என அனைவருக்கும் இதற்கான பொருள் புரியும்!" என்று பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
இந்த பதிவிலும் ராமதாஸ் யாரை சொல்கிறார், எதை சொல்கிறார் என தெளிவாக தெரியவில்லை. யார் பெயரையும் குறிப்பிட்டும் சொல்லவில்லை. ஆனால் இன்றைய நாளில் பரபரப்பாக உள்ள செய்தி திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதுதான்.

இதிலும் குழப்பம்தான்
இதுதான் ராமதாஸ் சொன்ன நாளேடுகளிலும், வந்துள்ளது. தற்போது இது பிரேக்கிங் செய்தியாகவும் உள்ளது. எனவே இப்படி வெட்கமில்லை என்று ராமதாஸ் சொன்னது செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதைதான் என்பது ஓரளவுக்கு அனைவருக்குமே புரிந்துவிட்டது. ஆனால் இதிலும் ஒரு குழப்பம் உள்ளது.

யாரை சொல்கிறார்?
திமுகவில் கூட்டணி வைக்க பாமக என்னவோ முயற்சி செய்தும், அதை திமுகதான் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வெட்கமில்லை என்று ராமதாஸ் சொல்வது, கட்சியில் இணைபவரையா? இணைத்து கொள்பவரையா என தெரியாமல் அனைவரையும் வழக்கம்போல் மண்டை காய வைத்து உள்ளார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications