டாக்டர் சரவணனுக்கு இன்ப அதிர்ச்சி..அதிமுகவில் இப்படி மாறிடுச்சே.. இறங்கி அடித்த எடப்பாடி
சென்னை: அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் சரவணனை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இன்பதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார். அதன்படியே அமைப்பு ரீதியாக அதிமுகவின் மாவட்டங்கள் 75-ல் லிருந்து 82 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட போது, அவருடன் ஐந்து மாவட்ட செயலாளர்கள் சென்றனர். அவர்களுக்கு பதிலாக
புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி.ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டச் செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை ரா. தமிழ்ச்செல்வன், குமரி மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த எல்.ஜெயசுதா, திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது தவிர மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜி.பாஸ்கரன், அன்வர் ராஜா, ஆர்.மனோகரன், வி.ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில் உள்ளிட்டோர் அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோல் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் சரவணனை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இன்பதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் டாக்டர் சரவணனின் நியமனத்தை பலரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். பாஜகவில் இருந்து கடந்த ஆகஸ்ட்டில் விலகிய டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில் திடீரென்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
டாக்டர் சரவணன் கடந்த 8 ஆண்டுகளில் 4 முறை கட்சி மாறி உள்ளார். கடந்த 2015ல் மதிமுகவில் இருந்த சரவணன் 2016ல் திமுகவில் இணைந்து எம்எல்ஏவானார். அதன்பிறகு கடந்த 2021ல் திமுகவில் சீட் கிடைக்காத நிலையில், அவர் பாஜகவில் இணைந்தார். அடுதத ஓராண்டிலேயே அங்கிருந்து விலகினார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்த சரவணனுக்கு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் பொறுப்பினை வழங்கி உள்ளார் எடப்பா பழனிசாமி.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications