Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நுங்கு" மார்பகம்.. மாட்டுக்கறி, ஸ்வீட்.. "ஒரு ஃபுளோவில் வந்துடுச்சு, மன்னிச்சுருங்க: டாக்டர் ஷர்மிகா

டாக்டர் ஷர்மிகா வீடியோ வெளியிட்டு தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நானும் மனுஷிதானே.. பேச்சுவாக்கில் தெரியாமல் அதையெல்லாம் சொல்லிட்டேன்.. தப்பா இருந்தா மன்னிருச்சுருங்க" என்று டாக்டர் ஷர்மிகா மன்னிப்பு கேட்டுள்ளார்.. இது தொடர்பாக ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

பாஜகவை சேர்ந்த டெய்சியின் மகளான டாக்டர் ஷர்மிகா ஒரு சித்தமருத்துவர்... இவர் யூடியூப் சேனல்களில் உடல்நலம் சம்பந்தமாக நிறைய கருத்துக்களை தெரிவித்து வருபவர்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.. ஷர்மிகா சொல்லும் ஒவ்வொரு மருத்துவ டிப்ஸ்களும் இணையவாசிகளால் உற்றுகவனிக்கப்படும்.

டிப்ஸ் சிம்பிள்

டிப்ஸ் சிம்பிள்

'நீங்க சொல்ற டிப்ஸ், எளிமையா இருக்கு, எங்களுக்கு புரியற மாதிரி சொல்றீங்க, அருமை டாக்டர்" என்று பல கமெண்ட்கள் இவருக்கு குவிவது வழக்கமான ஒன்று.. இந்நிலையில், டாக்டர் ஷர்மிகா அறிவியலுக்கு புறம்பாக கருத்துக்களை தெரிவிப்பதாக சில நாட்களாகவே ட்ரோல் செய்யப்பட்டார்.. பனை நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என்று சொல்லி இன்னொரு சர்ச்சையை எதிர்கொண்டார்.. "பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்.. கடவுள் மனசு வைத்தால்தான் குழந்தை பிறக்கும்" என்றெல்லாம் பேட்டிகளை தந்து, நெட்டிசன்களின் மீம்ஸ் கண்டெண்ட் ஆனார்...

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

அதுமட்டுமல்ல, "இந்தியர்கள் மனிதர்களை விட பெரிய விலங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது, அது ஒரு குல தெய்வம். நம்மை விட பெருசாக இருக்கும் விலங்குகளை நாம் சாப்பிட்டால் செரிக்காது, அதனால் உடல் பாதிக்கப்படும் என்று சொல்லி மதரீதியான சர்ச்சையை கிளப்பினார். பாஜக டெய்சியின் மகள் என்பதால், கூடுதலான எதிர்ப்புகளையும் இதற்காக ஷர்மிகா சந்திக்க வேண்டியதாயிற்று. "கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும்" என்றும் சொல்லி, பலரது விமர்சனத்துக்கும் ஆளானார்..

மார்பகங்கள்

மார்பகங்கள்

மிக மிக குறுகிய காலத்தில், எந்த அளவுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் பிரபலமானாரோ, அதே அளவுக்கு மிக மிக குறுகிய காலத்திலேயே கடுமையான விமர்சனங்களையும் இவர் எதிர்கொள்ளவேண்டிதாயிற்று.. நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில் இவரை ட்ரோல் செய்வது அதிகமாகவும், "என்னை ட்ரோல் செய்தால் சும்மா விடமாட்டேன்" என்று டாக்டர் ஷர்மிகா அதை கண்டித்து பேசிய வீடியோவும், வைரலானது. சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகள் வந்தாலும், டாக்டர்களே தன்னுடைய பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள் என்று ஷர்மிகா நினைக்கவில்லை.. அதுவும், மருத்துவ துறையின் கண்டனம் திடீரென கிளம்பும் என்று ஷர்மிகா கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை..

மாட்டுக்கறி

மாட்டுக்கறி

"சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி பற்றி இல்லை என்றும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடவில்லை, இதுபோன்ற போலியான தகவல்களை மருத்துவ அறிவுரைகள் என்ற பெயரில் பரப்பி வரும் ஷர்மிகா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருந்தார்.. இதையடுத்து, ஷர்மிகா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் தான் எதிர்கொண்ட சர்ச்சைகளை விவரித்து, அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஃபுளோவில்

ஃபுளோவில்

டாக்டர் ஷர்மிகா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் சொல்லியிருப்பதாவது, "குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான்... அது தப்புதான்.. பொதுவாக ஸ்வீட் சாப்பிட்டால் வெயிட் அதிகமாகும்.. அதுக்கு காரணம், அதில் கலோரி அதிகம்... அதனால், நான் சொன்னது 3 கிலோ அதிகரிக்கும் என்றால் 3 கிலோ இல்லை. பொதுவாக எடை அதிகரிக்கும் என்பதைத்தான் பேச்சுவாக்கில் ஒரு ஃபுளோவில் சொல்லிவிட்டேன். அதே போல, கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதால் டெங்கு மலேரியா வருகிறது என்பதையும் தப்பா சொல்லிவிட்டேன். அதுவும் பேச்சுவாக்கில் ஒரு ஃபுளோவில் சொல்லிவிட்டேன்...

மன்னிச்சிருங்க

மன்னிச்சிருங்க

எல்லாவற்றுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஹ்யூமன் எரர்... பிரைன் எரர் இல்லை... 1008 பிரச்சனை இருக்கு அப்படின்னா 1008 பிரச்சனை இருக்குனா அர்த்தம். அதுபோலதான். நானும் மனுஷிதானே. தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராவது தவறா எடுத்துக்கிட்டா மன்னிச்சுருங்க.. நாம் பேசுவதை இவ்வளவு உன்னிப்பாக கேட்கிறார்கள் என்கிறபோது, இனிமேல் கவனமாகப் பேசுவேன்" என்று டாக்டர் ஷர்மிகா சொல்லி உள்ளார்.. "அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்" என்றும் தன்னுடைய மன்னிப்பு வீடியோவுக்கு ஒரு தலைப்பை பதிவிட்டுள்ளார் டாக்டர் ஷர்மிகா.. சரி, அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+