தூக்க மாத்திரை போடாமல் தூக்கம் வேண்டுமா?.. மாதவிடாய் பிரச்சினையா?.. சன் பாத் எடுங்க.. டாக்டர் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல தூக்கம், மாதவிடாய் கோளாறுகள் தீர சூரிய குளியல் போடுங்கள் என அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Health Tips நல்ல தூக்கம் வர.. மாதவிடாய் கோளாறுகள் சரியா.. டாக்டர் தீபா அட்வைஸ்

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரிய குளியல். சூரியனில் நமக்கு நிறைய பலன்கள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்தது விட்டமின் டி. என்னதான் துணை உணவு பொருட்களில் இருந்து விட்டமின் டியை எடுத்துக் கொண்டாலும் சூரியனில் இருந்து கிடைப்பதுதான் முக்கியமானது.

    இதற்காக சூரிய குளியல் எடுப்பதெல்லாம் ஒன்று பெரிய சூட்சுமம் இல்லை. வீட்டு மாடியிலோ பால்கனியிலோ சூரிய கதிர்கள் படும் இடத்தில் நாம் போய் நின்றாலே போதுமானது. இந்த கொரோனா காலத்தில் நமக்கு சூரியனுடைய கதிர்கள் மிகவும் அதிகமாகவே தேவைப்படுகின்றன.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    சூரிய வெளிச்சம் நம் உடலில் படும்போது நுரையீரலில் இருக்கக் கூடிய எபிதீலியன் செல்கள் செயலற்று கிடக்கும் விட்டமின் டியை செயலாற்ற வைக்கிறது. கேத்தோலிசிதின் என்ற ஹார்மோனும் டெஃபிசின் என்ற ஹார்மோனும் நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    சுவாச பிரச்சினை

    சுவாச பிரச்சினை

    அத்துடன் இந்த வைரஸுக்கு எதிராக போராடி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆன்டி வைரலாகவும் ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க வேண்டும். ஆய்வுகள் மூலம் சுவாச பிரச்சினை இருப்போருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு நோயும் குணமாகியுள்ளது.

    சூரிய ஒளி

    சூரிய ஒளி

    100 ஆண்டுகளுக்கு முன்பும் இது போல் ஒரு தொற்றுநோய் ஏற்பட்ட போது உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது சூரிய கதிர்கள் படும்படி நோயாளியை நிற்க வைப்பதது, சூரிய ஒளியில் படுக்கைகள் போடப்பட்டு படுக்க வைத்திருந்தார்கள்.

    மாதவிடாய் பிரச்சினை

    மாதவிடாய் பிரச்சினை

    சூரிய வெளிச்சம் நம் உடலில் படும்போது நுரையீரலில் இருக்கக் கூடிய எபிதீலியன் செல்கள் செயலற்று கிடக்கும் விட்டமின் டியை செயலாற்ற வைக்கிறது. கேத்திலிசிடின் என்ற ஹார்மோனும் டெஃபென்சின் என்ற ஹார்மோனும் நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    சூரிய வெளிச்சம்

    சூரிய வெளிச்சம்

    அது போல் மன அழுத்தத்திலிருந்து நாம் வெளியே வர சூரிய குளியல் மிகவும் அவசியமாகும். சூரிய வெளிச்சத்தில் நம் உடல் படும்போது நமது மன அழுத்தம் குறைய ஒரு முக்கியமான ஹார்மோன் சுரக்கப்படுகிறது. அது என்ன ஹார்மோன் எனில் செரடோனின். இந்த ஹார்மோன் தூக்கத்தை அதிகரிக்கிறது.

    மெலடோனின்

    மெலடோனின்

    இரவு நேரத்தில் நம் உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டும் என்றால் செரடோனின் என்ற ஹார்மோன் சுரத்தல் முக்கியமானதாகும். இவை இரண்டும் சுரந்தால் மட்டுமே நமது உடலில் தூக்கத்தை கொடுக்கும். இரு ஹார்மோன்களும் நன்றாக சுரந்து தூக்கம் நன்றாக வந்தால் மன அழுத்தம் குறைந்துவிடும்.

    15 முதல் 20 நிமிடங்கள் வரை

    15 முதல் 20 நிமிடங்கள் வரை

    ஒன்று பாதித்தாலும் இன்னொன்றை பாதிக்கும். இந்த செரடோனின் என்ன செய்கிறது எனில் நம்மை சந்தோஷமாகவும் ஆக்டிவ்வாகவும் வைத்திருக்க உதவுகிறது. நம் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட வைத்திருக்கும். எனவே தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய குளியல் எடுக்க வேண்டும்.

    விட்டமின் டி

    விட்டமின் டி

    இதை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் 4.30 மணிக்கு மேல் இந்த சூரியக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில்தான் நல்ல கதிர்வீச்சுகள் வரும். அதிலும் அகச்சிவப்பு கதிர்களும் புறஊதா ஏ கதிர்களும் கிடைக்கிறது. இந்த புறஊதா ஏ கதிர்கள்தான் விட்டமின் டி கிடைக்க பெரும் உதவியை செய்கிறது என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+