Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஸ்க் பல்ஜ், டிஸ்க் விலகி போச்சா?.. நடக்கவே முடியலையா?.. அரசு யோகா மருத்துவமனையில் சூப்பர் சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஸ்க் பல்ஜ், ஹெர்னியேடட் டிஸ்க்கால் அவதிப்படுகிறீர்களா, அறுவை சிகிச்சை இல்லாமல் இலவசமாக 100 சதவீத வெற்றியடையும் சிகிச்சையை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் அளிப்பதாக டாக்டர் ஒய் தீபா தெரிவிக்கிறார்.

Recommended Video

    டிஸ்க் பல்ஜ், டிஸ்க் விலகி போச்சா?.. நடக்கவே முடியலையா?.. அரசு யோகா மருத்துவமனையில் சூப்பர் சிகிச்சை

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், பொதுவாக முதுகு வலி நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நமது எலும்பு தேய்மானத்தால் வருவது. அதில் முக்கியமனது Intervertebral Disc Prolapse.

    இடுப்பு பகுதியில் இருக்கக் கூடிய நரம்பு அழுத்தத்தால் வரக் கூடியது. தண்டுவடத்தில் இருக்கக் கூடிய இரு எலும்புகளுக்கு நடுவே டிஸ்க் இருக்கும். இது கீழே விழும்போதும், மிகவும் கஷ்டப்படும் போதோ, அல்லது ஓவர் வெயிட் தூக்கும் போதோ இந்த டிஸ்க் விலகி பக்கத்தில் இருக்கக் கூடிய நரம்பிற்கு அழுத்தம் கொடுக்கும்.

    முதுகுதண்டுவடம்

    முதுகுதண்டுவடம்

    இதனால் முதுகுதண்டுவடத்தில் கடுமையான வலி இருக்கும். அந்த நரம்பு உடலில் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு மருத்து போதலும் ஏற்படும். அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்திருந்தார்.

    இடுப்பு எலும்பு

    இடுப்பு எலும்பு

    அவருக்கு இடுப்பு எலும்பு வளைந்து போய்விட்டது. இதற்கு பெயர் Scoliosis ஆகும். இந்த பாதிப்புக்கு ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வார்கள். ஆனால் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் இவருக்கு மருத்துவர்கள் குழுவினர் 20 நாட்கள் சிகிச்சை அளித்தார்கள்.

     வலி இல்லை

    வலி இல்லை

    இவருக்கு இயன்முறை மருத்துவம், யோகா பயிற்சி, இயற்கை உணவு , அக்குபஞ்சர், கைநுட்ப துறை சிகிச்சைகள், மசாஜ்கள் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனால் அவருக்கு வலி நிவர்த்தி ஆகி இடுப்பின் வடிவமே தற்போது பழைய படி வந்துவிட்டது. அவருக்கு வலியும் இல்லை.

    யோகா மற்றும் அரசு மருத்துவமனை

    யோகா மற்றும் அரசு மருத்துவமனை

    20 நாட்கள் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தங்கியிருந்தார்கள். அவருக்கு இயற்கை உணவு, முளைக்கட்டிய பயறுகள், பழச்சாறுகள் ஆகிய உணவுகளை கொடுத்தோம். இந்த நோய் பாதிப்புடைய நிறைய பேர் நம் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினரிடம் சிகிச்சை மேற்கொண்டு பலனடைந்துள்ளார்கள்.

    சிகிச்சை

    சிகிச்சை

    இது போல் எனது கண்காணிப்பில் இன்னொருவருக்கும் இது போன்ற சிகிச்சை அளித்தேன். அவர் மருத்துவ ஆலோசனைக்கு என்னிடம் வந்த போது உட்கார கூட முடியவில்லை என்றார். அவருக்கு கைரோ பிராக்டிஸ், மேனிபுலேஷன், மசாஜ் , அக்குபஞ்சர் சிகிச்சைகளை கொடுத்தன் மூலம் அவர் இன்று நன்றாக நடக்கிறார். அன்று உட்காரவே முடியாது என்றவர், இன்று தன்னால் எல்லாம் செய்ய முடிவதாக தெரிவித்தார்.

     3 மாத அவதி

    3 மாத அவதி

    இதுகுறித்து அவர் கூறுகையில் வணக்கம் என் பெயர் ராஜேஷ் குமார். நான் கொளத்தூரில் இருந்து வருகிறேன். எனக்கு 3 மாதங்களாக முதுகில் டிஸ்க் பல்ஜ் பிராப்ளம் இருந்தது. என்னால் நடக்கவோ உட்காரவோ முடியாது. ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. நான் தெரிந்தவர் ஒருவர் சொன்னதன் பேரில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கடந்த 11 நாட்களாக எனக்கு இயற்கையான சிகிச்சைகளும் யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 90 சதவீதம் வலி இல்லை என்றார்.

    டிஸ்க் விலகினால் என்னவாகும்

    டிஸ்க் விலகினால் என்னவாகும்

    டாக்டர் தீபா தனது பேட்டியை தொடர்ந்தார். அப்போது அவர் கூறுகையில் இது மருந்தில்லா மருத்துவம். அது போல் ஒரு பைசா செலவில்லாமல் இலவச மருத்துவம். டிஸ்க் என்பது நமது உடலை வளைந்து நெளிய உதவுகிறது. டிஸ்குடன் நரம்பும் இருப்பதால் அந்த இடத்தில் டிஸ்க் விலகினாலோ, பெரிதாக இருந்தாலோ, மெலிந்து போனாலோ வலியை ஏற்படுத்தும் என்றார் டாக்டர் தீபா. இவர்களை போல் பாடியை சேர்ந்த மணிகண்டனும் இந்த டிஸ்க் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து தற்போது வலி குறைந்து நன்றாக நடப்பதாக தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+