கொரோனா மட்டுமில்லை.. எல்லா வைரஸையும் விரட்ட மருந்து இருக்கு!.. சொல்கிறார் சித்த மருத்துவர் மானேக்சா
சென்னை: கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என்றும் அதுகுறித்த ஆய்வுகள் நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் சித்த மருத்துவர் டாக்டர் ஒய்.ஆர். மானேக்சா தெரிவித்துள்ளார்.
Recommended Video
எம்டி (சித்தா) படித்துள்ள மானேக்சா பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து சித்த மருத்துவர் மானேக்சா ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கொரோனா 3ஆவது அலை
கே: கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை தாக்கும் என்கிறார்களே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: கொரோனா முதல் அலை முதியவர்களை அதிகமாக பாதித்தது. இரண்டாவது அலையானது முதியவர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்களை அதிகம் பாதித்தது. அந்த வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. அப்போது அது தனது ஆர்என்ஏவில் உள்ள புரதத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். எனவே அது வீரியமடையும். இந்த டெல்டா + இன்னும் உருமாற்றம் அடைந்து வீரியமடைந்தால் குழந்தைகளை தாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அது உறுதியானது அல்ல.

குழந்தைகளை தாக்குமா
கே: 3ஆவது அலை குழந்தைகளை தாக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் ?
ப: சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உறை மாத்திரை என்ற மருந்தை பிறந்த குழந்தைகளுக்கே கொடுக்கிறோம். தாய்ப்பாலில் ஒரு உரசு உரசி கொடுப்போம். இந்த மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் எந்தவித தொற்றுகளும் வராது.

கபசுர குடிநீர் அளவு
கே: கபசுரக் குடிநீரை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?
ப: கபசுரக் குடிநீரில் உள்ளவை எல்லாம் வெப்பம் வீரியமிக்க மருந்துகள். பெரியவர்களுக்கு 60 மில்லியும், 12 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளுக்கு 30 மில்லியும், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 10 -15 மில்லியும் கொடுக்கலாம். கபசுரக் குடிநீரை அசிடிட்டி, வயிற்றுப்புண் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயம் வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது.

கொரோனாவுக்கு மருந்து
கே: கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா?
ப: சித்த மருத்துவத்திற்கு கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பது கிடையாது. கபசுர குடிநீர் என்பது துணை மருந்து. குடிநீர் என அழைக்கப்படும் அனைத்து மருந்துகளுமே சித்த மருத்துவத்தில் துணை மருந்து. கஸ்தூரி கருப்பு, தாளக பற்பம், பவள பற்பம், நாகபற்பம் போன்ற மருந்துகள் கொரோனாவை மட்டும் அல்ல அனைத்துவிதமாக வைரஸ் நோய்களையும் உயிரிழப்பே இல்லாமல் குணமாக்கும். பெரு மருந்துடன் துணை மருந்தான கபசுர குடிநீரை கொடுத்தால் நிச்சயம் கொரோனாவை வெல்லலாம். இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். புதிய அரசும் அதுகுறித்த ஆய்வுகளை செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.

சித்த மருத்துவம்
கே: புதிய புதிய வைரஸ்களை எதிர்கொள்ள சித்த மருத்துவம் தயார் நிலையில் இருக்கிறதா?
ப: இந்த கொரோனா வைரஸ் என்பது பழைய நோய், புதிய நோய் அல்ல. இது 1960 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா குடும்பத்தில் நிறைய வைரஸ்கள் உருமாறி வருகின்றன. முன்னர் சார்ஸ், எஇஆர்எஸ் என உருமாறிய இந்த வைரஸ் தற்போது கோவிட் 19 ஆக கடைசியாக உருமாறியுள்ளது. அடினோ வைரஸ், ரைனோ வைரஸ், இன்ப்ளூயன்ஸா போன்றதுதான் இந்த கொரோனாவும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications