தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? ஒரே கிளிக்கில் முழு லிஸ்ட் இதோ
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடிில் இருந்து 5.43 கோடியாக சரிந்துள்ளது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்பாக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 என்று தெரிவித்தார்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி முழு விவரம் வருமாறு:
மாவட்டம் - நீக்கப்பட்ட வாக்காளர்கள்
* சென்னை - 14,25,018
* செங்கல்பட்டு - 7,01,871
* காஞ்சிபுரம் - 2,74,274
* செங்கல்பட்டு - 7,01,871
* அரியலூர் - 24,368
* தருமபுரி - 81,515
* திருப்பத்தூர் - 1,16,739
* சிவகங்கை - 1,50,828
* ராமநாதபுரம் - 1,17,364
* மயிலாடுதுறை - 75,378
* திருவண்ணாமலை - 2,52,162
* கோவை - 6,50,590
* கரூர் - 79,690
* ஈரோடு - 3,25,429
* திருப்பூர் - 5,63,785
* புதுக்கோட்டை - 1,39,587
* கள்ளக்குறிச்சி - 84,329
* விருதுநகர் - 1,89,964
* சேலம் - 3,62,429
* மதுரை - 3,80,474
* ராணிப்பேட்டை - 1,45,157
* நாகப்பட்டினம் - 47,338
* காஞ்சிபுரம் - 2,74,274
* தஞ்சாவூர் - 2,06,503
* விழுப்புரம் - 1,82,865
* நெல்லை - 2,16,966
* பெரம்பலூர் - 49,548
* நீலகிரி - 56,091
* நாகை - 57,338
* திருச்சி - 3,31,787
* கிருஷ்ணகிரி - 1,74,549
* நாமக்கல் - 1,93,706
* கன்னியாகுமரி - 1,53,373
* திருவள்ளுர் - 6,19,777
* தூத்துக்குடி - 1,62,527
* தென்காசி - 1,51,902
* கடலூர் - 2,46,818
* திண்டுக்கல் - 3,24,894 என மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications