Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 நாள் முகாம்.. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கணுமா? இன்று வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அந்ததந்த கலெக்டர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு எப்படி விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

tamil nadu voters list election commission

தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 18 ம் தேதி வரை பல்வேறு பணிகள் நடந்தது.

குறிப்பாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தனர். அதோடு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே இன்று சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. பொதுமக்கள் அதற்கென தனியாக உள்ள விண்ணப்பங்களை 6, 6பி, 7, 8 வாங்கி பூர்த்தியிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம், 'VOTER HELPLINE’ என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று (29ம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், 09.11.2023, 10.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+