எடப்பாடி கிளம்பும் வரை வெளியிலேயே வரலயே.. பின்னர் மேடையேறிய ஓபிஎஸ்.. பாஜக கண் அந்தப் பக்கம்? ஆத்தீ!
சென்னை : சென்னை வந்த பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திரௌபதி முர்முவோடு எடப்பாடி பழனிசாமி மேடையில் அமர்ந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் அறையிலேயே இருந்து வருகின்றனர்.
Recommended Video
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சென்னை வந்த திரௌபதி முர்மு
அதன்படி பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, இன்று சென்னைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர், அங்கு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டு சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்தடைந்த திரெளபதி முர்மு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க, அதி.மு.க கூட்டணி கட்சியினரை சந்தித்து வருகிறார். கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்டு நடக்கும் விழா மேடைக்கு திரௌபதி முர்மு வந்துள்ளார்.

வரவேற்பார்களா?
சென்னையில் திரௌபதி முர்மு கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாகக் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் வந்து நட்சத்திர ஹோட்டலின் தனி அறைகளில் காத்திருந்தனர். திரௌபதி முர்மு வரும் வரை, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அறையில் காத்திருந்தனர்.

மேடையில் எடப்பாடி பழனிசாமி
திரௌபதி முர்ம்பு ஹோட்டல் வந்தபிறகு ஆதரவு கேட்டு பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் றினார். அவருடன் மேடையில் எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும், எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் உள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ யாருமே மேடைக்கு வரவில்லை.

ஓபிஎஸ் தரப்பினர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்னும் அறையிலேயே காத்திருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி சென்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு மேடைக்கு வந்து திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு அளித்துள்ளார். ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் உடன் சென்றனர்.

ஆதரவு அதிகம்
எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடமே 62 எம்.எல்.ஏக்கள் 3 எம்.பிக்கள் ஆகியோர் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 3 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனாலேயே, பாஜகவில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளித்து முதலில் மேடையில் அமரச் செய்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி கிளம்பிய பிறகு இரண்டாவதாகவே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து திரௌபதி முர்முவை சந்தித்தார்.

சந்திப்பு தவிர்ப்பு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் ஒரே இடத்துக்கு ஒன்று போல் செல்வதில்லை. இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மனு தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பாக தம்பிதுரை கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!











Click it and Unblock the Notifications