திராவிட மாடல் காலாவதியான கொள்கை.. ஆளுநர் மாளிகை நிதியில் விதி மீறல் என்பது பொய்.. ஆர்.என் ரவி
சென்னை: ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர் என் ரவி, காலாவதியான கொள்கைகளை கொண்ட திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகை நிதியில் விதி மீறல் என்பது பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. இந்த நிலையில் , திராவிட மாடல் கொள்கை காலாவதியானது என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர் என் ரவி, காலாவதியான கொள்கைகளை கொண்ட திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி நான் ஆதரிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். முதலில் அதுமாதிரியான ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் வார்த்தை மட்டுமே ஆகும். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக இந்த வார்த்தை இருப்பதாகவும் 'ஒரே பாரதம், ஒரே இந்தியா' கருத்தை விரும்பாத சித்தாந்தமாக திராவிட மாடல் சித்தாந்தமாக உள்ளது.
பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது கூறியிருப்பது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியலாக உள்ளது" என்றும் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் மாளிகை நிதியில் விதி மீறல் என தமிழக நிதி அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் மாளிகை நிதியில் விதிமீறல் இருப்பதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசியிருந்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன், ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்தது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 ஆண்டு வரை ரூ.50 லட்சம் பணம் discretionary fund ஆக ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2019ம் ஆண்டுக்கு பிறகு திடீரென்று 50 லட்சத்தில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் Discretionary power என்ற பிரிவில் ரூ. 5 கோடியாக மாற்றப்பட்டுள்ளது. அந்த கணக்கு குறித்து ஆய்வு செய்ததில், ரூ. 5 கோடி பணத்தில் ரூ.4 கோடி அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வழங்கிய உணவு சத்துணவு கூட இல்லை. அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்து கொடுத்துள்ளனர்.
மேலும் மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆளுநர் மாளிகையின் கண்ணுக்கு தெரியாத கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கோடி எந்த காரணம் இல்லாமல், யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனநாயக மரபுக்கு நல்லது கிடையாது. இது நல்ல திட்டமே இல்லை.
ரூ.500க்கும் ரூ.1000க்கும் மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் நாம் ஒப்புதல் பெற்று வருகிறோம். ஆனால் ரூ. 5 கோடி யாருக்கும் சொல்லாமல் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா? என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தான் ஆளுநர் மாளிகையின் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பிடிஆர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications