அப்பா.. தாத்தாவை மிஞ்சிடீங்க! கட்சிப் பணிகளில் ஹைஸ்பீடு! உதயநிதி ஸ்டாலினை 5G என அழைத்த கி.வீரமணி!
சென்னை: கட்சிப்பணிகளில் கருணாநிதி, ஸ்டாலினை விட உதயநிதி ஸ்டாலின் படு வேகமாக இயங்கி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது 90வது பிறந்தநாளை ஒட்டி தன்னை சந்தித்து வாழ்த்து கூற வந்த உதயநிதி ஸ்டாலினிடம், அவரது செயல்பாடுகள் குறித்து கி.வீரமணி பெருமிதம் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு 5ஜி என புதிய அடைமொழியை சூட்டிய கி.வீரமணி, 5ஜியை போல் அதிவேகமாக் செயல்படுகிறீர்கள் என பாராட்டினார்.

கி.வீரமணி பிறந்தநாள்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை ஒட்டி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். பெரியார் திடலுக்கு சென்ற உதயநிதியை திராவிடர் கழக நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்று கீ.வீரமணியிடம் அழைத்துச் சென்றனர். உதயநிதியின் வருகையால் மகிழ்ந்து போன கி.வீரமணி அவரது கரங்களை பற்றி, தம்பி நீங்க ரொம்ப வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுறீங்க என மனதார பாராட்டினார்.

5ஜியை போல் வேகம்
அது மட்டுமல்லாமல் அப்பா, தாத்தாவை எல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் செயல்பாடுகள் உள்ளது என உதயநிதியிடம் கூறிய அவர், நீங்க 5ஜியை போல் அதிவேகமாக இயங்குவதால் உங்களுக்கு 5ஜி என நான் பெயர் வைக்கிறேன் என கி.வீரமணி கூறினார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. மேலும், என்ன சாப்பிடுகிறீர்கள் என வாஞ்சையுடன் உதயநிதியிடம் கீ.வீரமணி கேட்ட நிலையில், அதற்கு ஒன்றும் வேண்டாம் உங்களை சந்தித்து பேசியதே போதும் என்கிற வகையில் அங்கிருந்து புறப்பட்டார்.

கி.வீரமணி பாராட்டு
கி.வீரமணியிடம் இருந்து பாராட்டு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அப்பேர்பட்ட நபரே உதயநிதியை பாராட்டி 5ஜி எனக் கூறி புகழ்ந்துள்ளார் என்றால் உதயநிதியின் செயல்பாடுகள் அனைத்து தரப்பிலும் கவனிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. ஒரு காலத்தில் சமூகநீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவுக்கு சிறப்பு பட்டம் கொடுத்தவர் கீ.வீரமணி என்பது திரும்பிப் பார்க்கத் தக்கது.

இளம் தலைமுறைகள்
கி.வீரமணி பிறந்தநாளை ஒட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக் கூறினார். அதேபோல் கனிமொழி, ராஜீவ்காந்தி உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications