சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் என்ற சீமான் விமர்சனத்துக்கு திராவிடர் கழகம் பதிலடி!
சென்னை: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு திராவிடர் கழகத்தினர் பதிலடி தந்து வருகின்றனர்.
உசிலம்பட்டியில் பேசிய சீமான், சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 70 வயதில் திருமணம் செய்கிற பெரியார் புரட்சியாளராம்? தன் வாழ்வின் இறுதியில் சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்த முத்துராமலிங்கதேவர் சாதியாளரா? முத்துராமலிங்க தேவர்தான் புரட்சியாளர் என்றார்.

சீமான் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த Prince Ennares Periyar எழுதியுள்ள பதிலடி: தன் சொத்தைக் காப்பாற்றுவதற்காக 70 வயதில் திருமணம் செய்து கொண்டவரெல்லாம் புரட்சியாளரா? என்று கேட்டிருக்கிறார் சீமான்.
சீமான் இப்படி பேசுவது நமக்கொன்றும் புதிதாகத் தோன்றவில்லை. யாருக்கு வாலாட்டுவது என்பது அவர் விருப்பம். ஆனால் வாயிருக்கிறது என்பதற்காகக் கண்ட இடத்தில் குரைத்துக் கொண்டிருத்தல் அவருக்கு நல்லதல்ல. சொத்தைக் காப்பாற்ற திருமணம் செய்த பெரியார், அத்தனை சொத்துகளையும், தன் சொந்தங்களுக்கா எழுதி வைத்தார்? 70 வயதில் பெண்டாட்டி கட்டி, பிள்ளை பெறவேண்டும் என்று நினைத்தாரா? இந்த மக்களுக்குச் சுயமரியாதை உணர்வையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்காகத் தன்னுடைய சொந்த சொத்துகளையும், மக்களால் தனக்கென்று அளிக்கப்பட்ட நன்கொடைகளையும் சேர்த்துப் பாதுகாத்துப் பெருக்கி, அவற்றைப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமாக ஆக்கி, இன்றைக்கும் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த அறக்கட்டளையாக உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.
தன் சொந்தக்காரர்களுக்குப் போய் சேரட்டும் ... தன் அண்ணன் மக்களுக்கு போய் சேரட்டும் ... என்று கருதி இருந்தால், 75 ஆண்டுகளுக்கு பின்னாலும் இந்த ஈத்தரைகளால் தூற்றப்படும் ஒரு ஏற்பாட்டை அவர் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்தச் சொத்துகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, தன்னை இழி சொற்களும் பொய்யுரைகளும் வந்து சேரும் என்று தெரிந்த பின்பும் கூட, துணிச்சலுடன் முடிவெடுத்த தலைவர் பெரியார். இந்தத் தியாகத்திற்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக வேங்கை அன்னை மணியம்மையார்.

அரசியலுக்குச் செல்வதற்காக இந்த திருமணத்தை ஒரு வாய்ப்பாக கருதிக் கொண்டு இயக்கம் தொடங்கிய அறிஞர் அண்ணா கூட, பின்னாளில் அந்தத் திருமணத்தினால் இந்தச் சமூகத்திற்கு விளைந்த பயன் என்ன என்பதைச் செப்புப் பட்டயத்தைப் போல எழுதி வைத்து விட்டுத்தான் மறைந்தார்கள். கலைஞர், பேராசிரியர் உள்ளிட்ட திமுக தலைவர்கள் எல்லாம் தாங்கள் அந்தத் திருமணத்தை எதிர்த்த காரணத்தை எப்போதோ ஒப்புக் கொண்டுவிட்டார்கள். இதையே வாய்ப்பாகக் கொண்டு, பெரியார் மணியம்மையார் என்னும் அந்த இரு பெரும் தலைவர்களைக் கொச்சைப்படுத்தக் காலம் காலமாக முயன்றவர்கள் எல்லாம் அவர்களின் தியாக வரலாற்றின் சுவடுகளில் தூசாகிப் போய் விட்டார்கள்.
தந்தை பெரியார் தம் தன்மான இயக்கத்தை காக்க செய்த ஏற்பாடுகளுள் ஒன்று அன்னை மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது. அந்தச் சுயமரியாதை இயக்கத்தால் யாருக்கு நட்டம் ஏற்பட்டதோ, அந்த அக்ரஹாரக் குரல்கள் பெரியார்-மணியம்மையார் திருமணத்தைக் கொச்சைப்படுத்த இன்றும் முயல்கின்றன. தந்தை பெரியாரின் தத்துவங்களை எதிர்த்து நிற்க முடியாத சோதாக்கள், இதைப் பிடித்துத் தொங்கியாவது பெரியாரை அவதூறு செய்யலாமா என்று இன்றும் முனைந்து கொண்டேயிருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கலாமா என்று சீமான் பார்க்கிறார். வாழ்த்துகள்! வரலாறு காரி உமிழப் போகும் தமிழினத்தின் விபீஷணப் பட்டியலில் முதலிடத்திற்கு முந்திக் கொண்டிருக்கிறீர்கள் சீமான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications