”திராவிட மாடல் எதையும் இடிக்காது; உருவாக்கும்” உபி புல்டோசர் மாடலை விமர்சிக்கிறாரா ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும், எதையும் தாழ்த்தாது, சமமாக பாவிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தலைநிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

38 மாவட்டங்களில் இருந்து 4,000-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

தலைநிமிரும் தமிழகம்

தலைநிமிரும் தமிழகம்

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார். அதில், "தலைநிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு தலைநிமிரத் தொடங்கிவிட்டது.

 என் கல்லூரி காலம்

என் கல்லூரி காலம்

பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை பார்க்கும்போது எனது கல்லூரி காலத்தில் மேடையில் நான் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மற்றும் தேசிய இயக்க கொள்கைகளின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்கள் பேச்சுப் போட்டிகளில் கலந்துக்கொள்வார்கள். இதையெல்லாம் நான் சொல்வது மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல. பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கருணாநிதியும் அன்பழகனும்

கருணாநிதியும் அன்பழகனும்

அனைவருக்கும் பேச்சுக் கலை வராது. மேடையை ஆள்வது கோட்டையை ஆள்வதைபோன்றே கடினமானது. அந்த விதத்தில் மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி அளிக்கக்கூடிய பாசறையாக சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டுள்ளது. கருணாநிதியும், அன்பழகனும் பேச்சுக்கலையில் சிறந்து விளங்கினர். தமிழ்நாட்டையும் பல ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்கள். அவர்களிடம் மாணவர்கள் நிறைய கற்க வேண்டும். ஒன்றே குலம்; ஒருவனே தேவன், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பின்மையும், ஏன் வேண்டும் இடஒதுக்கீடு' என்பன போன்ற தலைப்புகள் பேச்சுப்போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

திராவிட மாடல்

திராவிட மாடல்

இது இந்தியாவுக்கு தேவையான தலைப்புகளாகும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாதான் மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும். தமிழ்நாட்டில் கட்சி மட்டுமின்றி ஆட்சியும் திராவிட மாடலில் நடந்து வருகிறது. திராவிட மாடல் எதையும் இடிக்காது; உருவாக்கும். யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்றுசேர்க்கும். யாரையும் தாழ்த்தாது. எல்லோரையும் சமமாகவே பாவிக்கும். யாரையும் தோற்கடிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+