“எல்லார்க்கும் எல்லாம்”.. வேட்டி சட்டையில் பொங்கல் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உயரிய இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, பொங்கல் பானையில் பொங்கல் வைத்து, தலைமைச் செயலக அலுவலர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் வேட்டி, சட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். மேலும், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமத்துவப் பொங்கல் விழாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவப் பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால், நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும் பொங்கட்டும் என்று இந்த இனிய நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications