எதிர்வினை வரும்! திராவிட கட்சிகள் எங்களை நம்பி இருக்கு! நிர்மலை தூக்கிய அதிமுகவிற்கு அண்ணாமலை பதிலடி

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் எடப்பாடி தனது டீமில் சேர்த்துக்கொண்டு உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பதில் அளித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார்.

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அவர் பாஜகவில் இணைந்து உள்ளார். இவர் அதிமுகவில் இணைந்தது மட்டுமின்றி தன்னுடன் ஒரு அணியையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்ததால் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார்.

மோதல்

மோதல்

நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணன் , இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் எடப்பாடி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்,.

வேறு நிர்வாகிகள்

வேறு நிர்வாகிகள்

IT பிரிவு மாநில செயலாளர் திலீப் மட்டுமின்றி OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் எடப்பாடி தனது டீமில் சேர்த்துக்கொண்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டனர், கூட்டணி கட்சி தலைவரை தரைகுறைவாக பேசிவிட்டனர் என்றெல்லாம் கருதாமல் இவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இணைந்துகொண்டார். இதையடுத்து அதிமுக - பாஜக இடையிலான மோதலாக இது மாறி உள்ளது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பதில் அளித்துள்ளார். அதில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.

 திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள்

எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும்.நான் ஷாப்பிங் போக நினைத்தால் என் ஷாப்பிங் லிஸ்ட் பெருசாக இருக்கும். அதற்கான கால நேரத்தை நான் முடிவு செய்வேன். என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+