Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொளத்தூரே அசந்துபோச்சே! உலகத் தரத்தில் பச்சை பசேல் கால்பந்து மைதானம்.. ஸ்டாலின் தொகுதி வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது சொந்தத் தொகுதியில் உலகத் தரத்தில் கால்பந்து மைதானத்தை உருவாக்கி இன்று திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பச்சை பசேலென செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம், கொளத்தூர் மக்களை மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றங்களால் அந்த திட்டம் தொடர்ந்து சீரிய முறையில் செயல்படவில்லை. இந்நிலையில் ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு, 'சிங்காரச் சென்னை 2.0' திட்டம் செயல்படத் தொடங்கியது.

Dream project: Stalin unveiled football court in kolathur constituency

பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகளும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது 718 பூங்காக்கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ள நிலையில் கூடுதலாக ரூ.100 கோடியில் 150 பூங்கா மற்றும் 50 விளையாட்டுத் திடல்களை அமைக்க திட்டமிடப்பட்டது. விளையாட்டு திடல்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன.

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் 1.87 கோடியில் செயற்கை புல் (Astro Turf) கால்பந்து மைதானம் அமைக்க கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, மைதானம் அமைக்கும் பணிகள் புயல் வேகத்தில் நடைபெற்று வந்தன.

Dream project: Stalin unveiled football court in kolathur constituency

இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்து உலகத் தரத்தில் தயாராகியுள்ள கால்பந்து மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மொத்தமாக 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில், பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

1.87 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை புல் கால்பந்து மைதானம், 30.42 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், 7.56 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபாதை, 24.47 லட்சம் ரூபாய் மதிப்பில் பார்வையாளர் மாடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி என மொத்தமாக ரூ. 3 கோடியே 30 லட்சம் செலவில் கால்பந்து மைதானத்தோடு பல்வேறு அசத்தலான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Dream project: Stalin unveiled football court in kolathur constituency

கால்பந்து மைதானத்தை திறந்து வைத்து, கால்பந்து உபகரணங்களையும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், 'டாஸ்' போட்டு ஃபுட்பால் மேட்ச்சை தொடங்கியும் வைத்தார். அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்மையாக தயார் ஆகி பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது கொளத்தூர் கால்பந்து மைதானம்.

Dream project: Stalin unveiled football court in kolathur constituency

தனது கனவுத் திட்டமான 'சிங்காரச் சென்னை' மூலம், தனது சொந்தத் தொகுதியில் அசத்தலான வசதிகளுடன் கால்பந்து மைதானத்தை தொடங்கி வைத்துள்ளது பற்றி பெருமிதத்தோடு பேசினார் முதல்வர் ஸ்டாலின். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் இந்த சிறப்பான மைதானத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

Dream project: Stalin unveiled football court in kolathur constituency
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+