ஓ மை கோஸ்ட் விழாவில் சிரித்து பேசிய தர்ஷா குப்தா- நடிகர் சதீஷ்! அப்போ ஆடை விவகார சர்ச்சை என்னாச்சு?
சென்னை: ஆடை விவகாரம் குறித்து பேசியதன் பிறகு இருவரும் மனம் விட்டு பேசியதால் தற்போது நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம் என நடிகர் சதீஷ் குறித்து நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். ஓ மை கோஸ்ட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இருவரும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நன்றாக பேசி கொண்டிருந்தனர்.
ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இந்த விழாவில் சன்னி லியோன் மும்பையிலிருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த படத்தில் தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ், டிக்டாக் புகழ் ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார். கவர்ச்சி நடிகை என அழைக்கப்படும் சன்னி லியோன் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நம் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி வந்திருக்கிறார் என்றும் கோவை பெண்ணான தர்ஷா குப்தா, கவர்ச்சியான உடையை அதாவது நம் கலாச்சாரத்திற்கு எதிரான உடையை அணிந்து கொண்டு வந்துள்ளார் என பேசியிருந்தார்.

பாடகி சின்மயி
இதற்கு பாடகி சின்மயி, இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் சதீஷின் மனைவி என்ன ஆடை உடுத்த வேண்டும் என சொல்வதற்கே அவருக்கு உரிமையில்லை என்றும் பலர் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில் தர்ஷா குப்தா தன்னிடம் வந்து நானே இத்தனை கவர்ச்சியான உடையை அணிந்துள்ளேன். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் என்ன மாதிரியான ஆடையை அணிந்து வருகிறார் என பார்ப்போம் என்றார்.

பட்டுப்புடவை
அப்போது சன்னிலியோன் பட்டுப்புடவை அணிந்து வந்ததும் தர்ஷா குப்தா அப்செட்டாகிவிட்டார். நான் பாருங்க எப்படி டிரஸ் செய்திருக்கேன், அவங்க எப்படி செய்திருக்காங்க என்றார். உடனே என்னிடம் இதை மேடையில் சொல்லுங்கள் என்றார். இதனால் நான் சொன்னேன் என நடிகர் சதீஷ் பல்டி அடித்தார்.

தர்ஷா குப்தா கொந்தளிப்பு
இதை கேட்ட தர்ஷா குப்தா கொந்தளித்து ஒரு பதிவை போட்டார். அதில் என் மீது பழி போடுவது சரியா சதீஷ், மேடையில் உடை குறித்து பேசுங்கள் என நானா உங்களிடம் கேட்டேன்? இது எனக்கு புதிதாக இருக்கிறது. யாராவது என்ன பத்தி மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? உடை பற்றி பேசியதும் எனக்கும் அன்னிக்கு மனம் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் அதை பெரிசா காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போ நான் சொல்லிதான் சொன்னேன்னு சொல்றது சரியில்லை என கொதித்தெழுந்தார்.

மோதல்
இப்படி இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில் நேற்றைய தினம் ஓ மை கோஸ்ட் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தர்ஷா குப்தாவும் சதீஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நன்றாக பேசிக் கொண்டிருந்தனர். இது செய்தியாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த பிரஸ் மீட் முடிந்ததும் செய்தியாளர்கள் வெளியே வந்த தர்ஷா குப்தாவை சூழ்ந்து கொண்டனர்.

முற்றுப் புள்ளி வைத்த தர்ஷா குப்தா
அப்போது அவரிடம் ஆடை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சதீஷ் இந்த விவகாரம் குறித்து போனில் என்னிடமும் என் அம்மாவிடமும் பேசினார். நானும் அவரது குடும்பத்தினருடன் பேசினேன். மேலும் நாங்கள் இருவரும் கடந்து வந்த பாதைகள் குறித்து பகிர்ந்து கொண்டோம். தற்போது முன்பை விட நல்ல நண்பர்களாகிவிட்டோம். இருவரும் இனி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக போக முடிவு செய்துள்ளோம் என தர்ஷா குப்தா தெரிவித்தார். இதன் மூலம் ஆடை விவகாரத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications