மக்களே கூடுதலாக சேமித்து வச்சிக்கோங்க.. சென்னையில் நாளை குடிநீர் கட்.. அதுவும் இத்தனை இடங்களிலா?
சென்னை: செம்பரம்பாக்கம் மதகு பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 31) சென்னையில் முக்கிய பகுதிகள் சிலவற்றில் குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குடீநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்பதை காணலாம்.
சென்னையில் உள்ள மக்களுக்கு குடிநீர் வாரியம் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் என பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலமாக சென்னை பெருநகரத்திற்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் வசிக்கும் மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தண்ணீரை நம்பியே உள்ளனர்.
தினசரி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது பரமாரிப்பு பணிகளுக்காக ஒரு சில நாட்கள் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் நாளை காலை 8 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 மணி வரை 24 மணி நேரம் (ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1) 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள மதகுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த ஏரியின் மதகு பராமரிப்புப் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள இருக்கின்றனர். இதன் காரணமாக ஜூலை 31 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி காலை 8 மணி வரை சென்னையின் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 24 மணி நேரம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேபோல் அவசரத் தேவைகளுக்கு வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளில் குடிநீர் தொட்டி மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமில்லாமல் வழக்கம் போல மேற்கொள்ளப்படும். மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications