கூடுவாஞ்சேரியில் வாழ்நாள் சேமிப்பில் வாங்கிய நிலம்.. ஆள்மாறாட்டம் செய்து விற்றதால் டிரைவர் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொரட்டூர் அருகே உள்ள பாடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து என்பவரின் குடும்பத்தினர், சென்னையின் புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில் வாழ்நாள் சேமிப்பில் நிலம் வாங்கி உள்ளார். அனால் நிலத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வைரமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக இந்த பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த அவர் தவறான முடிவு எடுத்துள்ளார். அவர் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை கொரட்டூர் அருகே உள்ள பாடி பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் வைரமுத்து என்பவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் 13-ந்தேதி தனது வீட்டில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தார். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் உருக்கமாக எழுதி இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளார்கள். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து விற்று மோசடி செய்துவிட்டதாகவும், அந்த விரக்தியில் தவறான முடிவு எடுத்தாகவும் கூறியிருக்கிறார் என கூறப்படுகிறது.

Driver

இந்நிலையில் கடைசி நாளில் வைரமுத்து, உருக்கமாக பேசி உள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வைரமுத்து கூறுகையில், இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். தமிழக முதல்வர் விஜய், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் காமகோடி நகரில் எங்களுக்கு சொந்தமான 8,696 சதுர அடி மனை இருக்கிறது. அந்த மனையை உமித்ராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரிவு போலீசார் 10 மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது தம்பியின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனது தந்தை தனது சிறுநீரகத்தை தம்பிக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஆனால், அவருக்கு வயதாகிவிட்டது. எனவே நான் இறந்த பிறகு எனது சிறுநீரகத்தை தம்பிக்கு வழங்க ஏற்பாடு செய்யுங்கள். எனது தம்பி வழியாக நான் வாழ விரும்புகிறேன். எனது கண்கள், இதயம் உள்ளிட்ட மற்ற உறுப்புகளையும் தானமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். நான் இறந்தாலும் உங்களுடனேயே இருப்பேன்" இவ்வாறு அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசி உள்ளார்.

தானம் செய்ய முடியாது

ஆனால் டிரைவர் வைரமுத்து இறந்து பல மணி நேரத்துக்கு பிறகே அவரது உடல் மீட்கப்பட்டதால், அவரது ஆசைப்படி உடல் உறுப்புகளை தானமாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை, வயதான தாய் மற்றும் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த தம்பி என அவரது குடும்பத்தினர் வைரமுத்துவின் வருமானத்தையே நம்பி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் இடம் தான் ஆள்மாறாட்டத்தில் மோசடியாக விற்கப்பட்டிருக்கிறதாம்.தற்போது அவரும் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பரிதவித்து போயிருக்கிறார்கள்.இ ந்த விவகாரத்தில் இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+