காஞ்சிபுரம் NHல் வீலிங்! புழல் சிறையில் டிடிஎஃப் வாசன்! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய இன்று நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் வாசனுக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் கோவையை சேர்ந்தவர். இவர் விலையுயர்ந்த பைக்குளில் நீண்ட தூரத்திற்கு சென்று சாகசங்களை செய்து அதை வீடியோவாக தனது Twin throttlers எனும் யூடியூப் சேனலில் பதிவு செய்வார்.

Driving License of TTF Vasans to be cancelled and notice to be sent to him

அவருடைய சேனலுக்கு 2கே கிட்ஸ்கள் அதிகம் பேர் ச்ப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இந்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வீலிங் செய்த போது நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவருடைய வாகனம் பல்டி அடித்தபடியே தூரத்தில் போய் விழுந்தது. அவரும் ஒரு தடுப்பு சுவரை தாண்டி தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் டிடிஎஃப் வாசனை நேற்று காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரைத்தது.

இதையடுத்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக டிடிஎஃப் வாசனுக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் பெற்றபின்னர் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+