வா.. ஸ்டேஷனுக்கு போகலாம்.. குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த இளைஞர்.. வைரல் வீடியோ!
குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: "வா.. ஸ்டேஷனுக்கு போகலாம்.. எதுக்கு என்னை நிறுத்துறே.. நான் என் வேலையை பார்த்துட்டுதானே போய்ட்டு இருக்கேன்" என்று குடிபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாருடன் தகராறு செய்யும் காட்சி வைரலாகி வருகிறது.
சென்னை ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர் குடிபோதையில் பைக்கில் வந்தார். அவரை வழிமறித்து நிறுத்தினர் போலீசார்.

ஏற்கனவே போதையில் இருந்த இளைஞர், போலீஸாரை பார்த்ததும், "எதுக்கு என்னை பிடிக்கிறே? என்ன பண்ண போறே? ரிமாண்ட் பண்ண போறியா? வெறும் 3 நாள்தான் என்னை உள்ளே வெக்க முடியும்? வா பாத்துக்கலாம்... வா வண்டி எடு.. ஸ்டேஷனுக்கு போகலாம்.. உன்னை என்ன பண்ணிட்டாங்க.. போறவனை புடிச்சி இழுத்து நிறுத்துறே" என்று தரக்குறைவாக பேசி தகராறு செய்தார்.
இதையடுத்து ராயபுரம் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கேயும் தகராறு செய்திருக்கிறார் இளைஞர். விசாரணையில் இவர் பெயர் திவாகரன் என்பதும், எண்ணூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, குடிபோதையில் வண்டி ஓட்டியது, ஹெல்மட் போடாமல் வண்டியை ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் திவாகரன் மீது கேஸ் பதியப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர் போலீசார்! காவல்துறையினரை தரக்குறைவாக இளைஞர் பேசும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications