அதிமுக அவுட்.. திமுக vs தவெக இடையேதான் போட்டியே.. செங்கோட்டையன் செக்! அதிமுக மாஜியே சொல்லிட்டாரே!
சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூரு புகழேந்தி எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எச்சரிக்கைகளை விதித்து உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூரு புகழேந்தி அளித்த பேட்டியில், அதிமுக மூத்த முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனை அனைத்து தொண்டர்களுக்கு அவரை தெரியும் நேற்று ஒரு இடத்தில் கூட தவறாக பேசவில்லை. பழனிசாமி தலைமை வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர் பார்த்தோம் ஆனால் அதை கூட அவர் சொல்லவில்லை. ஆனால் கட்சி இணைப்பு வேண்டும் தான் சொல்கிறார் ஆனால் யாரையும் ஏற்க மாட்டேன் என்று இபிஎஸ் உள்ளார்.

செங்கோட்டையன் - எடப்பாடி மோதல்
இது போன்று மற்றவர்கள் வெளியேறினால் கட்சிக்கு என்ன லாபம் என்று செங்கோட்டையன் சொன்னேன் அதுக்கு அவர் சிரித்தார். நீக்க வேண்டியவர் தலைவராக இல்லை தான்தோன்றி தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா சுற்று பயணம் அனைத்திலும் செங்கோட்டையன் இருந்தார். இப்படிப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். ஜெயலலிதா தான் நிரந்தரமான பொதுச்செயலாளர் என்று இருந்ததை நீக்கிவிட்டு நான் பொதுச்செயலாளர் என்று சொல்லும் இபிஎஸ் இடம் என்ன எதிர்பார்க்க முடியும்
எவ்வளவு உழைத்து இருக்கிறார் செங்கோட்டையன். ஜெயலலிதா செல்ல பிள்ளையாக செங்கோட்டையன் இருந்தார். சேலம் மாவட்டத்தில் செங்கோட்டையன் நடந்ததால் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தவர் எடப்பாடி பழனிசாமி அப்படி எந்த இடத்தில் இருந்து இப்போது பணம் பதவி வந்த பிறகு எப்படி இருக்கிறார். சின்னம்மா கையில் பதவி கொடுத்தார். நான்காவது இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி போய்விடுவார். நான்காவது இடத்திற்கு சீமான் எடப்பாடி பழனிசாமி போட்டி இருக்கும்.
திமுக தவெக போட்டி
முதல் இடத்திற்கு திமுக தவெக இடையேதான் 2026ம் ஆண்டு போட்டி இருக்கும். கொடநாடு கொலை இப்போது என்வாயிற்று. இப்படி எதிலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக நமக்கு முட்டாள் பையன் வேண்டும் என திமுக நினைக்கிறார்கள். பழனிசாமி பக்கத்தில் வைத்துக் கொண்டால் தோல்வி இருக்காது என்று திமுக தலைமை நினைக்கிறது. செங்கோட்டையன் ஓபிஎஸ் உட்பட நாங்கள் இருக்கும் இடம் தான் அதிமுக நீதிமன்றம் விரைவில் சொல்லும்
பழனிசாமி அரசியலில் அனாதையாக இருக்கும் வரையில் ஓயபோவதில்லை. மக்கள் உங்களை துரத்தி அடிப்பார்கள் அது தான் நடக்கும். செங்கோட்டையன் அன்பான முகத்தை இனி பார்க்க முடியாது முகம் திரும்பும்.. ஒவ்வொரு இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்லும் போது கோடி கணக்கில் செலவு செய்கிறார் ஆனால் செங்கோட்டையன் பணம் கொடுக்காமல் கூட்டத்தை கூட்டினார். எடப்பாடி பழனிசாமி 4ஆண்டுகளில் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடித்து இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தோல்வி
எடப்பாடி பழனிசாமி முதலாளி கட்சி இல்லை எம்ஜிஆர் ஜெயலலிதா தான் அதிமுக முதலாளி எடப்பாடி பழனிசாமி கைக்கூலி மட்டுமே தான். வேலுமணி கொள்ளையடித்த பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ய இருக்கிறார்கள். எல்லோரும் இணைய தான் போகிறார்கள். செங்கோட்டையன் அமைதியாக சிரித்து கொண்டு மட்டுமே இருக்கிறார். அவர் எதைப்பற்றியும் கவலை படவில்லை.. சின்னம்மா, ஓபிஎஸ் சந்தித்து செங்கோட்டையன் பேச வேண்டும் எனது ஆசை அதற்கு 100சதவீதம் வாய்ப்பு உள்ளது அப்படி இணைந்தால் அதிமுக எங்கள் என்று மாறும் அது குறித்து செங்கோட்டையன் சொன்னேன் அதற்கு கண்டிப்பாக மாறும் என்று செங்கோட்டையன் சொன்னார்.
எடப்பாடி பழனிசாமி இப்போது ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருடன் தகராறு செய்து வருகிறார். செங்கோட்டையன் நீக்கம் செய்தது தலைவர் அம்மா ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் நீக்கியது போன்றது நினைக்கிறேன் தங்கமணி வேலுமணி தான் producer. அவர்கள் இருவரும் தான் எடப்பாடி பழனிசாமியை ஆப்பரேட்டர் செய்கிறார்கள். அதனால் அவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்து வரமாட்டார்கள் பின்னால் இருந்து இபிஎஸ்யை இயக்கி வருகிறார்கள். செங்கோட்டையன் எந்த இடத்தில் டம்மி என்று சொல்லவில்லை எதுவும் பெரிதாக பேச மாட்டார்கள் என்று தான் சொன்னேன்.எடப்பாடி பழனிச்சாமி வேலுமணி கருத்து வேறுபாடு இருப்பது நாடகமாக தான் இருக்கும். கொள்ளை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விட்டு கொடுக்க மாட்டார்கள், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications