புரட்டும் கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு லீவ்
சென்னை: தீவிர மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.
நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்தே கனமழை பெய்தது.

எங்கு பெய்தது
அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இன்று அதிகாலை வரை விடாமல் மழை பெய்து வந்தது. அதேபோல் அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

தீவிர மழை
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்தே தீவிர கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இன்றும் அங்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை
திருவாரூரில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருவாரூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையிலும் விடாமல் மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

என்ன காரணமாக
நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்று உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இது வரும் 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications