சென்னையில் இன்னைக்கு இந்த வழியா போக முடியாது! தொடங்கியது சுதந்திர தின ஒத்திகை! டிராபிக் சேஞ்ச்
சென்னை: ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இதற்கான ஒத்திகை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை ஆகஸ்ட் மாதம் 4, 10 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆகஸ்ட் 4,10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு ஒத்திகை தொடங்கும். இது முடியு வரை நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம். அதேபோல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை,ஈ.வெ.ரா. பெரியாா் சாலை,பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு,முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்" என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. எனவே காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, இந்த வழியாக வரும் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications