சென்னை ஆவடி உள்பட 3 இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? முழு லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக ஆவடி, அண்ணா நகர் மேற்கு உள்பட சில இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 30.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்சட்டி, அண்ணா நகர் மேற்கு, ஆவடி மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பஞ்சட்டி: கவரப்பேட்டை, கீழ்முதல்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, கரணி, புதுவொயல், பெருவொயல், இராசபாவம், கொழும்பேடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அண்ணாநகர் மேற்கு: ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17 வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு,திருமூலர் காலனி, 18 வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு,தென்றல் நகர், 15வது மெயின் ரோடு, எச் பிளாக், 11வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
ஆவடி: சிடிஎச் ரோடு, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், பெரியார் நகர், முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பிஎஸ்என்லெ் - சிடிஎச் ரோடு, எச்விஎப் ரோடு, ஆவடி பேருந்து பனிமனை, செக்போஸ்ட், என்எம் ரோடு, நந்தவன மேட்டூர், கஸ்தூரிபாய் நகர், கன்னிகாபுரம், நரு பஜார்உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் பாரமரிப்பு பணியை காரணம் காட்டி இப்படி மின்சாரம் நிறுத்தப்படுவது இது முதல் முறையல்ல. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் முறையாக மின்சாரம் விநியோகம் செய்ய மின்வாரியம் சார்பில் இப்படி அடிக்கடி பராமரிப்பு பணி என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் மேற்கூறிய இடங்களில் பராமரிப்பு பணியின் காரணமாக தற்காலிகமாக 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications