பலமான காற்று வீச போகிறது.. சென்னைக்கு மிக அருகில்.. மீனவர்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
சென்னை: தமிழகத்தை தாக்க போகும் நிவர் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வங்கக்கடலில் உருவாக உள்ள நிவர் புயல் தமிழகத்தை வரும் 25ம் தேதி தாக்க உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்த இந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இன்னும் 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு 25ம் தேதி ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்படி
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு மிக அருகில்தான் இருக்கிறது. சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. இது தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள்
இந்த புயல் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் எல்லாம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.

மீனவர்கள்
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் வரும் 26ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25ம் தேதி புயல் கரையை கடக்கிறது. ஆனால் 26ம் தேதியும் கடுமையான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே 26ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்
சென்னைக்கு மிக அருகே நிவர் புயல் உருவாகி வருவதால் சென்னை மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் இன்றில் இருந்தே காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்கள்
கடலோர மாவட்டங்களில் இன்று 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் அன்று புயலின் வலிமையை பொறுத்து காற்றின் வேகம் 90 கிமீ அளவிற்கு கூட செல்ல வாய்ப்புள்ளது. இதன் கடலோர மாவட்டங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்பு படை தீவிரமாக முயன்று வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications