சீண்டும் பாஜக.. கடைசி நேரத்தில் அதிமுக - தவெக கூட்டணி.. தேர்தல் நேரத்தில் மாறப்போகும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, அதிமுக - தவெக கூட்டணி இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவை தொடர்ச்சியாக பாஜக சீண்டி வரும் நிலையில், தொகுதி பங்கீட்டில் சிக்கல் வர வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் தவெக கூட்டணியை அதிமுக இறுதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அடுத்ததாக இந்த அணியில் கூடுதலாக சில கட்சிகளை இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

Due to the BJP Pressure AIADMK-TVK Alliance Possible Ahead of Tamilnadu Assembly Polls 2026

அதிமுக - பாஜக கூட்டணி

பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டது முதலே பாஜகவினர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றே கூறி வருகின்றனர். அதிமுக தரப்பில் தேர்தல் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு கிடையாது என்று கூறிய பின்னரும், கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை சொல்லி வருகிறார்கள்.

அதிமுகவை சீண்டும் பாஜக

தற்போது எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்துவிட்டு அதிமுகவைச் சேர்ந்தவர் முதல்வர் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்து முன்னணி மற்றும் பாஜக நடத்திய மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோரை கொச்சைப்படுத்திய விவகாரம் அதிமுகவுக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

அதிமுக - பாஜக பிரியுமா?

தொடர்ச்சியாக அதிமுகவை சீண்டும் பணிகளில் பாஜக இயங்கி வருவதாக பார்க்கப்படுகிறது. முதலில் கூட்டணி ஆட்சி என்று சொன்ன பாஜக, தற்போது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று கூட சொல்லாமல் தவிர்த்திருக்கிறது. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூற தொடங்கி இருக்கின்றனர்.

அதிமுகவின் செயல்

ஏற்கனவே வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்த பெருமை அதிமுகவுக்கு உள்ளது. இதனால் மீண்டும் கடைசி நேரத்தில் அதிமுக அந்த முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு அமையலாம்.

விஜய் - எடப்பாடி அமைதி

அதுமட்டுமல்லாமல் தவெகவை தொடங்கியதில் இருந்தே அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை. இன்னொரு பக்கம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்திலும் கூட விஜய் மற்றும் தவெகவை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதிமுக 2ஆம் கட்ட தலைவர்களும் தவெக தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தேர்தல் காலம்

இதனால் கடைசி நேரத்தில் அதிமுக - தவெக கூட்டணி உறுதியாகும் என்று கருதப்படுகிறது. தவெகவுக்கு இளைஞர்கள் ஆதரவு இருந்து வரும் சூழலில், அதிமுகவுக்கு பாரம்பரிய வாக்குகள் நிச்சயம் கைகொடுக்கும். இதன் மூலமாக திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக - தவெக கூட்டணி எளிதாக அறுவடை செய்ய முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை

அதேபோல் அதிமுக - தவெக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்தது. ஆனால் முதல்வர் பதவி, சரிக்கு பாதி தொகுதிகள் என்று தவெக பல்வேறு விதிகளை கொடுத்ததால், அதிமுக பின் வாங்கியது. இதனால் தேர்தல் நெருங்கும் போது, கூட்டணி கணக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+