சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி!

ஜெ. இறந்த நாளன்று நடுரோட்டில் டூயட் ஆடி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி!-வீடியோ

    சென்னை: "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..." என்னா ஆட்டம்??? இறந்த நாள், பிறந்த நாள் வித்தியாசம் கூடவா சில அதிமுகவினருக்கு தெரியாமல் போய்விட்டது?

    நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக ஏராளமான அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்படித்தான் ஒரு கிராமத்திலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இணையத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை.

    எம்ஜிஆர்-ஜெயலலிதா

    எம்ஜிஆர்-ஜெயலலிதா

    ஆனால் அங்கு அதிமுக கொடிகள் ஆங்காங்கே பறக்கிறது. நடுத்தெருவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளை சேலை அணிந்து டான்ஸ் ஆடுகிறார். அவரது சேலையில் அதிமுக பேட்ஜ் குத்தப்பட்டுள்ளது. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து" என்ற எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடி பாடல் ஒலிக்க, இந்த பெண் டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார்.

    சிரித்தபடி டான்ஸ்

    சிரித்தபடி டான்ஸ்

    தனியாக ஆடுகிறார் என்று பார்த்தால், அடுத்த சில வினாடிகளில் ஜோடி ஒருவர் இணைகிறார். அவரும் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அவருக்கு எப்படியும் வயது 45-க்கு மேலதான் இருக்கும். ரெண்டு பேரும் தெருவில் டூயட் ஆட, இதை அங்கிருந்தோர் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடுபவர்களும் ஏதோ கல்யாணம், கச்சேரியில் ஆடுவதை போல பல்லை இளித்து கொண்டு சிரித்தமேனிக்குதான் பின்னிப் பிணைந்து ஆடினார்கள்.

    கை தட்டுகிறார்கள்

    கை தட்டுகிறார்கள்

    ஒரு நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூட இவர்களுக்கு தெரியாதா? இவர்களுக்குதான் தெரியவில்லை என்றால் சுற்றி நின்று ரசித்து பார்ப்பவர்களுக்கும் தெரியாதது அதிர்ச்சியாக உளள்து. சிலர் கைதட்டுகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.

    இதுவா அஞ்சலி?

    அதிமுகவில் இல்லாதவர்கள் கூட ஜெயலலிதாவுக்கான மரியாதையை ஒழுங்காக செலுத்தினார்கள். ஆனால் இப்படி டூயட் பாட்டை போட்டு கூத்தடித்து அஞ்சலி செலுத்தியது இணையத்தில் வீடியோவாக பரவி அனைவருக்குமே ஷாக்கை கொடுத்துள்ளது.

    கரை வேட்டி - சேலை

    கரை வேட்டி - சேலை

    மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு இதைவிட ஒரு களங்கத்தை யாராலும் ஏற்படுத்த முடியாது. இது எந்த ஊரோ, எந்த கிராமமாக இருந்தாலும் சரி, அத்தொகுதி எம்எல்ஏவோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுபோன்ற செயலை கண்டிப்பது உடனடி அவசியமாகும். நினைவு தினத்தில் முறையான அஞ்சலியை செலுத்த தெரியாத அதிமுகவினருக்கு கரை வேட்டி, சேலை ரொம்ப அவசியம்தானா?

    English summary
    Duet Dance in Jayalalithaas 2nd Day Memorial Day Duet Dance in Jayalalithaas 2nd Day Memorial Day Video goes Viral. ADMK executives should strongly condemn this bad attitude.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X