டம்மி போஸ்டிங்னு நினைத்தால் மாஸ்டர் பிளான்? யார் அந்த புது பாஸ்? ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் பெயர் அடிபடுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் காலியாகவே நீடித்து வருகின்றன. அதிகார வர்க்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த முக்கியப் பதவிகளைக் கைப்பற்ற, ஓய்வுபெறும் நிலையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திரைமறைவில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதுகுறித்த எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களுக்கு அரசின் அதிகார மையங்களை ரகசியமாக அணுகி, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த அவர்கள் முட்டி மோதி வரும் சூழலில், இந்த ரேஸில் யாருக்கும் தெரியாமல் மிக அமைதியாக ஒரு காயை நகர்த்தி வருகிறதாம் மாநிலத்தின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பு.

TNERC IAS Radhakrishnan TNERC Chairman

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவி

சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராகவும், பயிற்சிப் பிரிவு இயக்குநராகவும் நியமிக்கப்பட்டது நிர்வாக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காரணம், மின் வாரியத்தைப் போன்ற ஒரு செல்வாக்குமிக்க, அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறையிலிருந்து, ஒப்பீட்டளவில் முக்கியத்துவமற்ற ஒரு பதவிக்கு அவர் மாற்றப்பட்டது ஒரு "டம்மி" நியமனம் என்றே கோட்டை வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

ராதாகிருஷ்ணன் IAS

ஆனால், இந்த பதவியை ராதாகிருஷ்ணனே கேட்டு பெற்றதாகவும் அதிகாரிகள் மத்தியில் பேச்சு உண்டு. ஏனென்றால், இதன் பின்னணியில் சாய்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரின் திட்டமிடல் இருப்பது தான் என்கிறார்கள்.

இந்த பின்னணி குறித்து கோட்டையில் நாம் விசாரித்த போது, " வருகிற செப்டம்பர் 30-ந்தேதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் ராதாகிருஷ்ணன். இன்னும் ஒன்றரை மாதங்கள் தான் அவரது பணி காலம் இருக்கிறது. ஓய்வுக்குப் பிறகும் ஏதேனும் ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டும் என விரும்பினார் ராதாகிருஷ்ணன். அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே, தலைமைச் செயலாளரிடம் தனக்குள்ள நெருக்கத்தையும் நட்பையும் பயன்படுத்தி ஆலோசித்தார்.

தமிழக அரசு - மாஸ்டர் பிளான்

இந்த ஆலோசனையின் விளைவாகவே, காலியாக இருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை ராதாகிருஷ்ணனுக்கு வழங்குவது குறித்த திட்டம் உருவானது. இது தொடர்பான விவரங்கள் முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அதற்குப் பச்சைக்கொடியும் காட்டப்பட்டுவிட்டது.

இருந்தாலும், இதில் ஒரு நிர்வாகச் சிக்கல் எழுந்தது. மின்சார வாரியத்தின் தலைவராக இருக்கும் ஒருவரே, பணி ஓய்வு பெற்றவுடன் நேரடியாக அதே மின்சார துறையைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டால், அது கடுமையான விமர்சனங்களுக்கும் தேவையற்ற சர்ச்சைகளுக்கும் வழியமைக்கும் என அஞ்சப்பட்டது. இந்த விமர்சனங்களை தவிர்க்கவே ஒரு வியூகம் வகுக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் சர்ப்ரைஸ்

அதன்படி, முதலில் அவரை மின்சார வாரியத்திலிருந்து இடமாற்றம் செய்து, நடுநிலையான ஒரு சாதாரண பதவியில் அமர்த்துவது என்றும், பிறகு செப்டம்பர் இறுதியில் அவர் ஓய்வுபெற்றதும், அக்டோபர் மாதத்தில் அவரை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிப்பது என்றும் ரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் படவிருக்கிறார் ராதாகிருஷ்ணன்" என்றெல்லாம் கோட்டை வட்டாரங்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டன.

ஆனால், இந்த பின்னணி திட்டமிடல் எதுவுமே தெரியாமல், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியைப் பிடிக்கத் தொடர்ந்து தூது அனுப்பி வருகிறார்களாம்..!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+