எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்க.. அடிக்கடி குறுக்கே வராதீங்க.. காங். எம்எல்ஏவை கண்டித்த துரைமுருகன்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது அடிக்கடி குறுக்கிட்டு பேசுவது சரியல்ல. அவரை பேச அனுமதியுங்கள் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார்.
Recommended Video
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 5 மாதங்களாக அதன் மீது எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார்.

நீட் விலக்கு மசோதா
இதையடுத்து நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று கூடியது. அப்போது அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், நீங்களா நாங்களா என பேசிக் கொண்டே போனால் பிரச்சினை நீண்டு கொண்டே செல்லும். இப்போது நமக்கிருக்கும் பிரச்சினை தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பதுதான்.

தொடரும்
அதற்காகத்தான் நாம் ஒன்று கூடியுள்ளோம். குற்றச்சாட்டுகளை பேசினால் தொடர்ந்து போய் கொண்டேயிருக்கும் என்றார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் இந்த சட்டம் எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும்.

சலசலப்பு
இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேச முயற்சித்தார். அப்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த பிரச்சினைக்கு சுமூக முடிவுகிடைக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசும் போது அடிக்கடி குறுக்கிடுவது சரியல்ல. அவரை பேச அனுமதியுங்கள் என்றார்.

நீட் தேர்வு
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் அதிமுக நீட் விலக்குக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என வெளியில் பலர் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தனது தரப்பு கருத்துகளை குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications